Parasakthi: பெரும் சேனை ஒன்று தேவை.. வெளியானது சிவகார்த்திகேயனின் பராசக்தி பட ட்ரெய்லர்!
Parasakthi Movie Trailer: நடிகர்கள் சிவகார்திகேயன், ரவி மோகன் மற்றும் ஸ்ரீலீலா போன்றவர்கள் இணைந்து நடித்த மிக பிரம்மாண்ட படம் தான் பராசக்தி. இதை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள நிலையில், டான் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் 2026 ஜனவரி 10ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகின்ற நிலையில், இன்று இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் கோலிவுட் சினிமாவில் தொடர்ந்து படங்கள் மிக பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது. இந்த வரிசையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் மதராஸி (Madharaasi). இதை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் (AR.Murugadoss) இயக்கியிருந்தார். இது கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இப்படத்தை அடுத்தாக இவரின் நடிப்பில் தயாராகியுள்ள 25வது படம்தான் பராசக்தி (Parasakthi). இந்த படத்தை இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்க, டான் பிக்ச்சர்ஸ் இனைந்து தயாரித்திருந்தது. இதில் சிவகார்த்திகேயனுடன் நடிகர்கள் அதர்வா (Athrvaa), ரவி மோகன் (Ravi Mohan), ராணா (Rana) மற்றும் ஸ்ரீலீலா உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் (GV. Prakash) இசையமைத்திருக்கும் நிலையில், வரும் 2026 ஜனவரி 10ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இன்று 2026 ஜனவரி 4ம் தேதியில் வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: ‘SMS வைப் ரிட்டர்ன்’.. ஜீவாவின் 47வது படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? வெளியான வீடியோ!
பராசக்தி திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :
Every revolution begins with a question. Right here ✊
Presenting the trailer of #ParasakthiLink 🔗 – https://t.co/YQCZ6sU2V1
Storming screens worldwide on 10th January 2026!#ParasakthiFromPongal#ParasakthiFromJan10@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan… pic.twitter.com/6jYPNhCeOF
— DawnPictures (@DawnPicturesOff) January 4, 2026
இந்த் பராசக்தி திரைப்படத்தின் ட்ரெய்லர் அப்படியே நம்மை 1960 காலகட்டத்திற்கு கூட்டிச் செல்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் செழியன் என்ற வேடத்தில் நடித்துள்ள நிலையில், அவரின் சகோதரனாக அதர்வா நடித்துள்ளார். இதில் வில்லனாக ரவி மோகன் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் ஒரு அரசு ஊழியராக இதில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜன நாயகன் படம் முழுமையாகவே பகவந்த் கேசரி பட ரீமேக்கா? ட்ரெய்லரில் ஒத்துப்போன காட்சிகள்..
இந்தி மொழி திணிப்பு , மாணவர் போராட்டம் என அதிரடி ஆக்ஷன், எமோஷனல், காதல் மற்றும் திரில்லர் என அனைத்தும் கலந்தக் கலவையாக இப்படம் தயாராகியுள்ளது. மேலும் இந்த படத்தில் அரசியல் கதைகளும் இனைந்துள்ளது என்பது இந்த ட்ரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது.
பராசக்தி படத்தின் டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஓபன் எப்போது :
இந்த் பராசக்தி படமானது சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமாக தயாராகியுள்ளது. இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகிறது. இந்த் படம் இந்தி மொழி எதிர்ப்பு குறித்து உருவாகியுள்ள நிலையில், இந்தி மொழியில் வெளியிடப்பட்டது. இப்படம் ரிலீசிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நாளை 2025 ஜனவரி 5 ஆம் தேதியில் இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என கூறப்படுகிறது.