Sivakarthikeyan: எந்த கட்சியையும் சார்ந்து பிளான் பண்ணி பண்ண படம் இது இல்லை – சிவகார்த்திகேயன் பேச்சு!
Sivakarthikeyan About Political Movie: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன். இவரின் பராசக்தி படமானது வரும் 2026 ஜனவரி 10ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ஆடியோ லான்ச் நேற்று 2026 ஜனவரி 3ம் தேதியில் சிறப்பாக நடைபெற்றிருந்தது. அதில் பேசிய சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் ஒப்பீடு குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) நடிப்பில் 2026ம் ஆண்டில் வெளியாகி காத்திருக்கும் திரைப்படம்தான் பராசக்தி (Parasakthi). இந்த திரைப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்க, டான் பிக்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படமானது கடந்த 1960ல் நடந்த உண்மையான சம்பவத்தை மையமாக கொண்டு தயாராகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க, நடிகர் ரவி மோகன் (Ravi Mohan) அதிரடி வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தில் மேலும் நடிகர்கள் ஸ்ரீலீலா (Sreeleela), அதர்வா (Athrvaa), ராணா (Rana) உட்பட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) இசையமைத்துள்ள நிலையில், இந்த படத்தின் பாடல்களை அனைத்தும் இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றுவந்தது.
இப்படம் வரும் 2026 ஜனவரி 10ம் தேதியில் வெளியாகும் நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா நேற்று 2026 ஜனவரி 3ம் தேதியில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், பராசக்தி படம் எந்த அரசியல் கட்சியையும் (Political party) சார்ந்ததல்ல என தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: தளபதி விஜய்யின் லாஸ்ட் ரோர்.. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியானது ஜன நாயகன் படத்தின் ட்ரெய்லர்..
பராசக்தி படம் எந்த அரசியலையும் சார்ந்ததல்ல என பேசிய சிவகார்த்திகேயன் :
பராசக்தி வெளியீட்டு விழாவின் மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் அதில், “படங்களில் நடிக்கிறது தான் நம்ம வேலை. அதனால் அரசியல் படம் பண்ணாலும், அதில் நடிக்க தான் வரும். அதனால் அது மட்டும்தான் நான் பண்ணுவேன். இந்த மாதிரியாக நிறைய ஜானர் படங்கள் மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்கள் பண்ணனும்தான் எனது ஆசை அவ்ளோதான்.
இதையும் படிங்க: பார்வதி- கம்ருதீனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து அடுத்து வெளியேறும் நபர் யார்? இணையத்தில் வைரலாகும் தகவல் இதோ!
எந்த கட்சியையும் சார்ந்து, அப்படி பிளானை பண்ணி எந்த படங்களையும் பண்றது இல்லை. நான் அமரன் திரைப்படம் பண்ணும்போது கட்சியை வைத்து படம் பண்ணுறான்னுதான் சொன்னாங்க” என அந்த நிகழ்ச்சிதியில் சிவகார்த்திகேயன் விளக்கம் கொடுத்து பேசியிருந்தார்.
பராசக்தி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :
The clock’s ticking and the excitement is undeniable 🧨
Trailer from tomorrow – 6 PM ⏰#ParasakthiAudioLaunch#ParasakthiFromPongal#ParasakthiFromJan10@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @DawnPicturesOff @redgiantmovies_ @Aakashbaskaran… pic.twitter.com/DeYHad2fle— DawnPictures (@DawnPicturesOff) January 3, 2026
இந்த பராசக்தி படமானது இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான கதைக்களத்தில் தயாராகியுள்ளது. கடந்த 1960ல் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படம் தயாராகியுள்ள நிலையில், வரும் 2026 ஜனவரி 10ம் தேதியில் வெளியாகிறது . இன்னும் இப்படத்தின் வெளியீட்டிற்கு சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவருகிறது. அதன்படி இப்படத்தின் ட்ரெய்லர் இன்று 2026 ஜனவரி 4ம் தேதியில் மாலை 6 மணிக்கு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.