நிவின் பாலிக்கு ஜோடியாக இணையும் மமிதா பைஜூ.. எந்த திரைப்படத்தில் தெரியுமா?
Bethlehem Kudumba Unit Movie: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் நிவின் பாலி. இவரின் நடிப்பில் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் படங்கள் தொடர்ந்து வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் புது படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ இணைந்துள்ளார். அது எந்த திரைப்படம் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.
மலையாள சினிமாவில் பிரபல கதாநாயாகனாக கலக்கிவருபவர் நிவின் பாலி (Nivin Pauly). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் தொடர்ந்து பிரம்மாண்டமான படங்கள் திராகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் சர்வம் மாயா (Sarvam Maya) என்ற படம். இந்த படமானது திகில் கதைக்களத்துடன் வெளியாகியிருந்த நிலையில் ரசிகர்களிடையே சிறப்பான வரவேப்பை பெற்றிருந்தது. அந்த வகையில் இந்த் படமானது வெளியாகி தற்போதுவரை சுமார் ரூ 70 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது. மேலும் திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பையே பெற்றவருகிறது. அந்த வகையில் இவரின் புது படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கியுள்ளது. இந்த படத்தை பிரேமலு படத்தை இயக்கிய இயக்குநர், கிரிஷ் ஏ.டி (Girish A.D.) இயக்கிவருகிறார்.
இவர் பிரேமலு 2 படம் இயங்கிவந்த நிலையில், அந்த படத்தை கைவிட்டுவிட்டார். இதையடுத்து தற்போது புது படத்தை இயக்க தொடங்கிவிட்டார். அந்த படம்தான் “பெத்லகேம் குடும்ப யூனிட் ” (Bethlehem Kudumba Unit). இந்த படத்தில்தான் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ (Mamitha Baiju) இணைந்து நடித்துவருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியுள்ள நிலையில், இப்படம் குறித்த பதிவை படக்குழு பகிர்ந்துள்ளது.




இதையும் படிங்க: ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தின் இயக்குநர் இவரா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
பெத்லகேம் குடும்ப யூனிட் படக்குழு பகிர்ந்த ஷூட்டிங் தொடக்கம் குறித்த இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
இந்த திரைப்படத்தில் நடிகர் நிவின் பாலி நடிக்க, நடிகை மமிதா பைஜூ அவருக்கு ஜோடியாக நடித்துவருகிறார். இப்படமானது ஒரு குடும்ப கதையின் பின்னணியில், காதல் மற்றும் காமெடி கலந்த கதைக்களத்தில் தயாராகிவருகிறது. இந்த படமானது இந்த 2026ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு உலகமெங்கும் வெளியாகும் என கூறப்படுகிறது.
மமிதா பைஜூவின் திரைப்படங்கள் லிஸ்ட் :
நடிகை மமிதா பைஜூ, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்துவருகிறார். இவர் தமிழில் ஜன நாயகன், இரண்டு வானம் மற்றும் சூர்யா46 போன்ற படங்களில் நடித்துவருகிறார். மேலும் மலையாளத்தில்தான் நிவின் பாலியுடன் “பெத்லேம் குடும்ப யூனிட்” என்ற படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த 2026ல் மட்டுமே மமிதா பைஜூவின் நடிப்பில் கிட்டத்தட்ட 4 படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மலையாள சினிமாவில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பார்மா வெப் சீரிஸ் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
இந்த திரைப்படங்களின் ரிலீஸ் தேதி தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சூர்யாவுடன் இவர் நடித்துள்ள சூர்யா46 படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழியை அடிப்படையாக கொண்டு தயாராகியுள்ளது. இந்த படமானது மமிதா பைஜூவிற்கு பிரம்மாண்ட வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது.