கம்ருதீன்- பார்வதிக்கு ரெட் கார்ட் கிடைக்குமா? இணையத்தில் கொதிக்கும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள்!
Bigg Boss Tamil 9 Ticket to Finale Task Controversy: தமிழில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக கிட்டத்தட்ட 90 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ் சீசன் 9 தமிழ். இந்த நிகழ்ச்சியில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் கடந்த ஒருவராமாக நடைபெற்றுவரும் நிலையில், நேற்று (2026 ஜனவரி 2ம் தேதி) நடந்த எபிசோடில் பார்வதி மற்றும் கம்ருத்தீனின் செயல் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக பணியாற்றிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் சீசன் 9 தமிழ் (Bigg Boss Season 9 Tamil). இந்த நிகழ்ச்சியானது ஆண்டுதோறும் தமிழ் மக்களிடையே எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சியாக இருந்துவருகிறது. அந்த வகையில் கடந்த 2025 அக்டோபர் 5ம் தேதி முதல் இந்த சீசன் 9 நிகழ்ச்சியானது துவங்கிய நிலையில், தற்பதுவரை கிட்டத்தட்ட 90 நாட்களை எட்டியுள்ளது. இன்னும் 2 வாரத்தில் முழுமையாக இந்த நிகழ்ச்சியானது நிறைவடைந்துவிடும் என்ற நிலையில், இந்த போட்டியின் இறுதிக்கட்ட டிக்கெட் டூ பினாலே டாஸ்க் (Ticket to Finale Task) கிட்டத்தட்ட ஒரு வார காலமாக நடைபெற்றுவருகிறது. இதில் போட்டியாளர்களுக்கு இடையே பெரும் பிரச்சனைகளும் எழுந்துவந்தது. அந்த வகையில் நேற்று 2026 ஜனவரி 2ல் வெளியான எபிசோடில் ஒரு காருக்குளே போட்டியாளர்கள் எவ்வளவு நேரம் இருக்கிறார்கள், மேலும் இந்த போட்டியில் கடைசிவரை யார் அந்த காரில் இருக்கிறார்களோ அவர்களே டிக்கெட் டூ பினாலேக்கு டாஸ்கிங் வெற்றியாளர் என கூறப்பட்டது.
அந்த வகையில் இந்த டாஸ்கில் பார்வதி (VJ Parvathy) மற்றும் கம்ருதீன் (Kamruddin) நடந்துகொண்ட விதம் போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவருக்கும் ரெட் கார்ட் (Red Card) கொடுக்கவேண்டும் என இணையத்தில் மக்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர். மேலும் குரல் கொடுக்கும் விதத்தில் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர்களின் ஜாக்குலின், ஷிவின், மற்றும் சௌந்தர்யா உட்பட பல்வேறு பிரபலங்கள் தங்களின் இணையத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.




இதையும் படிங்க: நான் அந்த நடிகரை பார்த்துதான் அதையெல்லாம் கத்துக்கிட்டேன்- சியான் விக்ரம் ஓபன் டாக்!
பார்வதி மற்றும் கம்ருதீன் செயல் குறித்து வைரலாகும் பதிவு :
#Parvathy mental hospital sethrunga da 🤦 https://t.co/0kDBiTHSnA
— Nithish (@bumblenature) January 2, 2026
இந்த வீடியோவில் தெளியாகி தெரிகிறது. காரின் கதவை திறந்து கம்ருதீன் மற்றும் பார்வதி இருவரும், சாண்ட்ராவை வலுக்கட்டாயமாக கீழ் தள்ளிவிடுகிறார்கள். இதில் சாண்ட்ரா மயங்கிய நிலையில், சபரி மற்றும் வினோத் ஆகிய ருவரும் இந்த டாஸ்கில் இருந்து வெளியேரினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவிவருகிறது.
கம்ருதீன் மற்றும் பார்வேதின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவை வெளியிட்ட முன்னாள் பிக் பாஸ் தமிழ் போட்டியாளர்கள் :

கார் டாஸ்கில் சாண்ட்ராவை பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் வலுக்கட்டாயமாக காரில் இருந்து கீழ் தள்ளியிருந்தனர். இதில் கீழே விழுந்த சாண்ட்ரா பானிக் அட்டாக் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக சபரி மற்றும் வினோத் ஆகியோரும் இந்த போட்டியிலிருந்து விலகிவிட்டனர். பின் இது குறித்து பிக் பாஸ் வீட்டில் பெரும் பிரச்சனையே கிளம்பியது என்றே கூறலாம். இந்நிலையில் சபரி, திவ்யா, விக்கல்ஸ் விக்ரம் மற்றும் வினோத் உட்பட பல்வேறு போட்டியாளர்களும் கம்ருதீன் மற்றும் பார்வதியை எதிர்த்து குரல் கொடுத்திருந்தனர்.
இதையும் படிங்க: திரைப்படங்களின் வெற்றிக்கு அதிர்ஷ்டம்தான் காரணமா? – அசத்தல் பதிலளித்த க்ரித்தி ஷெட்டி!
அந்த விதத்தில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களும் இவர்களுக்கு ரெட் கார்ட் கொடுக்கவேண்டும் என ஆதரவு தெரிவித்து பதிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது போன்று பிக் பாஸ் சீசன் 6ல் பிரதீப் ஆண்டனி வீட்டில் இருப்பதில் சக போட்டியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டிருந்தது. அது போல நிச்சயமாக கம்ருதீன் மற்றும் பார்வதி இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்