பிக்பாஸ் ஜூலியின் திருமணம் எங்கு? எப்போது தெரியுமா? – இணையத்தில் கசிந்த தகவல்
Bigg Boss Tamil Maria Juliana : தமிழ் சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி முதல் சீசனில் ரசிகர்களிடையே அதிக அளவில் பேசப்பட்ட ஒரு போட்டியாளர் ஜூலி. இவரது திருமணம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
வெளி நாடுகளில் பிக் பிரதர் என்ற பெயரில் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ரியாஸ்டி நிகழ்ச்சி இந்தியாவில் பிக்பாஸ் என்று தொடங்கப்பட்டது. இந்தி சினிமாவில் முதன் முறையாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தொடர்ந்து பல ஆண்டுகளாக மக்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்த நிகழ்ச்சி தொடர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் ஒளிபரப்பத்தொடங்கினர். அந்த வகையில் கடந்த 2017-ம் ஆண்டு தமிழ் மொழியில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள், பிரபலங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலமானவர்கள் என பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் சிலர் பாஸிட்டிவாக பிரபலம் ஆனால் சிலர் நெகட்டிவாக பிரபலம் ஆவது வழக்கமாக உள்ளது. அதன்படி முதல் சீசனில் மக்களிடையே நெகட்டிவான விமர்சனத்தைப் பெற்றவர் மரியா ஜூலியானா.
இவர் தமிழ் நாட்டில் நடைப்பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் மரியா ஜூலியானா. இவர் அந்த பிரபலத்தின் காரணமாக பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். முதலில் அவரை வரவேற்ற ரசிகர்கள் பிறகு அவர் மாற்றி மாற்றி பேசும் பழக்கம் உடையவராக இருந்ததால் நெகட்டிவ் விமர்சனத்தைப் பெற்றார். தொடர்ந்து பிக்பாஸ் தமிழ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார் நடிகை மரியா ஜூலியானா.




பிக்பாஸ் மரியா ஜூலியானா திருமணம் எப்போது?
இந்த நிலையில் அவ்வபோது சில படங்களிலும் ரியால்டி நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து கலந்துகொண்ட மரியா ஜூலியானா தற்போது திருமணத்திற்கு தயாராகி உள்ளார். இவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயம் நடைப்பெற்ற நிலையில் திருமணம் எங்கு எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மரியா ஜூலியானாவிற்கு சென்னை பரங்கி மலையில் உள்ள செயின்ட் பேட்ரிக் தேவாலயத்தில் வருகின்ற ஜனவரி மாதம் 16-ம் தேதி 2026-ம் ஆண்டு திருமணம் நடைபெற உள்ளதாகவும் அன்று மாலையே திருமண வரவேற்பு நடைபெறும் என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.
Also Read… வெயிட்டிங்கில் வெறியாகும் ரசிகர்கள்… ஜன நாயகன் படத்தின் ட்ரெய்லர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
நடிகை மரியா ஜூலியானாவின் இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram