Viral Video : நான்காவது மாடியில் இருந்து மகனை சேலையில் கட்டி தொங்க விட்ட தாய்.. அதிர்ச்சி வீடியோ!
Woman Tied Her Son With Saree | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் தாய் ஒருவர் தனது மகனை சேலையில் கட்டி 4வது மாடியில் இருந்து கீழே இறக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் உலகில் நம்மை சுற்றி நடைபெறும் முக்கிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் தாய் ஒருவர் தனது மகனை நான்காவது மாடியில் இருந்து சேலையில் கட்டி கீழே இறக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன, அந்த தாய் தனது மகனை சேலையில் கட்டி தொங்க விட்டது ஏன் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நான்காவது மாடியில் இருந்து மகனை சேலையில் கட்டி தொங்க விட்ட தாய்
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் தாய் ஒருவர் தனது மகனை நான்காவது மாடியில் இருந்து சேலையில் கட்டி மூன்றாவது மாடிக்கு இறக்குகிறார். மூன்றாவது மாடியில் விழுந்த தனது சேலையை எடுப்பதற்காக அந்த தாய் அவரது மகனை அவ்வாறு சேலையில் கட்டி கீழே இறக்குகிறார். இது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : சாலையில் செல்லும் வாகனங்களில் கதவுகளை திறந்துவிட்ட இளைஞர்.. உடனடி ஆக்ஷன் எடுத்த போலீஸ்!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
This woman tied her son with a saree and took him from the 4th floor to the 3rd floor….. because her saree had fallen on the 3rd floor🤡
pic.twitter.com/bSnMeBFuS8— Ghar Ke Kalesh (@gharkekalesh) February 23, 2026
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் தாய் ஒருவர் நான்காவது மாடியில் நின்றுக்கொண்டு தனது மகனின் கைகளில் சேலையை கொண்டு கட்டி கீழே இறக்குகிறார். அந்த சிறுவன் மூன்றாவது மாடிக்கு சேலை மூலம் கீழே இறங்கிச் சென்று அங்கு கிடக்கும் தனது தாயின் சேலையை எடுக்கிறார். பிறகு அந்த பெண் அந்த சிறுவனை சேலையை பிடித்து மேலே தூக்குகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : வீடற்ற சிறுவர்களுக்கு சாலையோரத்தில் கல்வி கற்றுக்கொடுக்கும் நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகும் நிலையில், ஒரு சேலைக்காக சிறுவனின் உயிரை பணயம் வைப்பதா என்றும், அந்த பெண் செய்வது முட்டாள் தனமான செயல் என்றும் பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.