AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : கிணற்றில் அங்கும் இங்கும் அலைமோதும் தண்ணீர்.. இணையத்தை வியப்புக்குள்ளாக்கிய வீடியோ!

Well Water Oscillating In Gujarat | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், குஜராத்தில் உள்ள கிணற்றில், கிணற்று நீர் அங்கும் இங்கும் அலைமோதும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Viral Video : கிணற்றில் அங்கும் இங்கும் அலைமோதும் தண்ணீர்.. இணையத்தை வியப்புக்குள்ளாக்கிய வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Aug 2026 17:39 PM IST

ஸ்மார்ட்போன்களின் உதவியால் உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியொக்கள் நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும். இதில் பல ஆச்சர்யமான சம்பவங்களும், பல அதிர்ச்சியான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் இடம்பெறும். அந்த வகையில், குஜராத்தில் (Gujarat) உள்ள ஒரு கிணற்றில் தண்ணீர் அலைமோதுவது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கிணற்றில் அலைமோது நீர் – வியப்பை ஏற்படுத்திய சம்பவம்

கடலில் தண்ணீர் அலைமோது வழக்கம். அதாவது கடலில் இருக்கும் தண்ணீர் வேகமாக கரையில் வந்து மோதும். இதனை கடற்கரை ஓரங்களிலும், கடலில் பயணம் செய்யும்போது பார்க்கமுடியும். ஆனால், குஜராத்தில் உள்ள ஒரு கிணற்றில் வழக்கத்திற்கு மாறாக தண்ணீர் அலைமோதுகிறது. அதனை கண்டு வியப்புக்குள்ளான கிராம மக்கள் அதனை வீடியோ பதிவு செய்து வெளியிட்ட நிலையில் அது பேசுபொருளானது. இந்த நிலையில், வீடியோ வைரலானதை தொடர்ந்து அது குறித்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : பெற்றோரை நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அழைத்துச் சென்ற பெண்.. கனவு நனவானது!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், வட்ட வடிவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணறு முழுவதும் தண்ணீர் நிறைந்துள்ளது. அந்த கிணற்றில் இருக்கும் தண்ணீர் இந்த பக்கமும், அந்த பக்கமுமாக அலைமோதுகிறது. பொதுவாக கிணற்றில் இருக்கும் தண்ணீர் இவ்வாறு அலைமோதாது. ஆனால், இந்த கிணற்றில் இருக்கும் தண்ணீர் அலைமோதுவது அந்த கிராம மக்களிடையா அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : 52 ஆண்டுகளுக்கு பிறந்த பெண் குழந்தை.. கொண்டாடிய குடுபத்தினர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us