AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : காலால் மாவு பிசைந்த பெண்.. இணையத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய வீடியோ.. உண்மை என்ன?

Woman Stomping Dough With Foot | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியீக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பெண் ஒருவர் காலால் மாவு பிசையும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Viral Video : காலால் மாவு பிசைந்த பெண்.. இணையத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய வீடியோ.. உண்மை என்ன?
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 28 Jul 2026 22:06 PM IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். இந்த வீடியோக்களில் சில அதிர்ச்சியூட்டும் வகையிலும், சில வீடியோக்கள் ஆச்சர்யமூட்டும் வகையிலும் இருக்கும். அந்த வகையில், இந்திய பெண் ஒருவர் காலால் மாவு பிசைவது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி சுகாதாரம் தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சுகாதாரம் இல்லாமல் தயாரிக்கப்படும் இந்திய உணவுகள்

வெளிநாடுகளில் இருப்பவர்கள் மத்தியில் இந்தியா சுகாதாரம் இல்லாத நாடு, இந்திய உணவுகள் சுகாதாரம் இல்லாத முறையில் தயாரிக்கப்படும் என்ற கருத்து உள்ளது. இந்தியர்களுக்கு உடல்நல குறைவு ஏற்படுவது சுகாதாரமற்ற உணவு முறையால் தான் எனவும் பரவலாக கருத்து உள்ளது. இந்த நிலையில் தான், இந்திய பெண் ஒருவர் காலால் மாவு பிசைவது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : விவசாயம் செய்யும் மனித ரோபோட்.. இணையத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பெண் ஒருவர் தனது கால்களால் பெரிய பாத்திரத்தில் மாவு பிசைகிறார். அந்த பாத்திரத்தின் மீது சில எளிகள் அமர்ந்துக்கொண்டு இருக்கின்றன. அந்த பெண் மாவு பிசைவதற்கு அருகே கழிவறை உள்ளது. அவற்றை எதையும் பொருட்படுத்தாமல அந்த பெண் மாவு பிசைகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : பாகிஸ்தானில் அறிமுகம் செய்யப்பட்ட சைக்கிள் ஆம்புலன்ஸ்.. பேசுபொருளான வைரல் வீடியோ!

இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் உருவாக்கப்பட்டது. தற்போதைய சூழலில் உண்மை எது, போலி எதுவென கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு செயற்கை நுண்ணறிவு வீடியோக்கள் உள்ளன. அதனை உணராத பலரும் அந்த வீடியோவில் இருப்பது உண்மை சம்பவம் என நினைத்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

Follow Us