AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : பாகிஸ்தானில் அறிமுகம் செய்யப்பட்ட சைக்கிள் ஆம்புலன்ஸ்.. பேசுபொருளான வைரல் வீடியோ!

Cycle Ambulance Introduced In Pakistan | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பாகிஸ்தானில் சைக்கிள் ஆம்புலன்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Viral Video : பாகிஸ்தானில் அறிமுகம் செய்யப்பட்ட சைக்கிள் ஆம்புலன்ஸ்.. பேசுபொருளான வைரல் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Jul 2026 23:58 PM IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் சில வீடியோக்கள் ஆச்சர்யத்தையும், சில வீடியோக்கள் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில், பாகிஸ்தானில் சைக்கிள் ஆம்புலன்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. பாகிஸ்தானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சைக்கிள் ஆம்பூலன்ஸ் குறித்த விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

பாகிஸ்தானில் அறிமுகம் செய்யப்பட்ட சைக்கிள் ஆம்புலன்ஸ்

மனிதர்களுக்கு மருத்துவ சேவை மிகவும் அவசியமானதாக உள்ளது. உயிரை காப்பாற்ற உடனடி மருத்துவ சேவையை வழங்கும் வகையில் தான் ஆம்புலன்ஸ் சேவை உள்ளது. உலக நாடுகளில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் முதல் ஏர் ஆம்புலன்ஸ் வரை பல்வேறு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் தான், பாகிஸ்தானில் சைக்கிள் ஆம்புலன்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : முதியவரை முட்டி தூக்கி வீசிய 900 கிலோ எடை கொண்ட எறுமை மாடு.. பரபரப்பு வீடியோ!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், சைக்கிள் ஆம்புலன்ஸ் தொடங்கி வைக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. அதில், மருந்து பெட்டி பொருத்தப்பட்ட சைக்கிள் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us