Viral Video : மாடியில் இருந்து விழுந்து சிக்கிக்கொண்ட நாய்.. காப்பாற்றிய இளைஞர்!
Hero Saves Pet Dog Stuck on Electric Pole | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், மாடியில் இருந்து கீழே விழுந்து மின் கம்பத்தில் சிக்கிக்கொண்ட நாயை இளைஞர் காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகைகயான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். உலகத்தில் நம்மை சுற்றி நடைபெறும் பல ஆச்சர்யமுட்டும் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில், நாய் ஒன்று மாடியில் இருந்து கீழே விழுந்து சிக்கிக்கொண்ட நிலையில் அதனை இளைஞர் ஒருவர் காப்பாற்றும் வீடியோ இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
மாடியில் இருந்து கீழே விழுந்த நாய்
வீடுகளில் செல்லபிராணிகளாக நாய்கள் வளர்ப்பதை பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர். நகர்புறங்களில் நாய்களை வளர்ப்பது சற்று சவாலானதாக உள்ளது. அதிலும் குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில் நாய்களை வளர்ப்பது மிகவும் கடினமாக உள்ளது. அந்த வகையில் மாடியில் இருந்து தவறி விழுந்த நாய் ஒன்று மின்சார கம்பத்தின் நடுவே சிக்கிக்கொண்டது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : திடீரென சிவப்பாக மாறிய ஓடை.. துருக்கியில் நடந்த சம்பவம்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
A pet dog accidentally fell from an upper balcony and became trapped high up on an adjacent electric pole. When a group of people on their way to a Jaago ceremony noticed the dog trapped, Mohit risked a climb to reunite him with his frantic owner. https://t.co/Uvb7wdd7zA
— Ghar Ke Kalesh (@gharkekalesh) November 27, 2026
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், மாடியில் இருந்து கீழே தவறி விழுந்த நாய் ஒன்று அந்த வீட்டின் அருகே உள்ள மின் கம்பத்திற்கும் சுவற்றுக்கும் இடையே சிக்கி தவித்துள்ளது. இந்த நிலையில் தான், இளைஞர் ஒருவர் அந்த நாயை காப்பாற்றியுள்ளார்.
இதையும் படிங்க : Viral Video : நடைபாதையில் வந்த இருசக்கர வாகனங்கள்.. 3 பெண்கள் செய்த மாஸ் செயல்.. வைரல் வீடியோ!
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.