AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Viral Video : இருசக்கர வாகனத்தை இழுத்துச் சென்ற கார்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!

Car Drags Two Wheeler In Delhi Road | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், டெல்லி சாலையில் கார் ஒன்று, இருசக்கர வாகனத்தை இழுத்துச் செல்வது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Viral Video : இருசக்கர வாகனத்தை இழுத்துச் சென்ற கார்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 20 Sep 2026 20:24 PM IST

சமூக ஊடகங்களின் உதவியால் உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும். சில சமயங்களில் உலகில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் மற்றும் அச்சாத்தியமான சம்வவங்கள் தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் தான், தலைநகர் டெல்லியில் (Delhi) இருசக்கர வாகனத்தை கார் ஒன்று சாலையில் இழுத்துச் செல்வது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

இருசக்கர வாகனத்தை இழுத்துச் சென்ற கார்

போக்குவரத்து மிகுந்த டெல்லி சாலையில், கார் ஒன்று இருசக்கர வாகனத்தை இழுத்துச் செல்வது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணையில், தனிஷ் டோகாஸ் என்ற 21 வயது இளைஞர் நிறுத்தி வைத்திருந்த தனது இருசக்கர வாகனத்தின் மீது அமர்ந்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற கார் ஒன்று தனிஷ் மீது மோதியுள்ளது. இதில் தனிஷ் கீழே விழுந்த நிலையில், இருசக்கர வாகன மட்டும் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : விநாயகர் சதுர்த்தி ஒட்டி ரூ.27,000 விற்பனையாகும் தங்க மோதகம்.. இணையத்தில் வைரல்

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இருசக்கர வாகனத்தை கார் இழுத்துச் செல்வதை கண்டு கடும் ஆத்திரத்திற்கு உள்ளான பொதுமக்கள், அந்த காரை ஓட்டிச் சென்ற வேணு கோபால் என்ற 73 வயது நபரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். சிலர் அவர் மீது தாக்குதலையும் நடத்துகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

Follow Us