விநாயகர் சதுர்த்தி ஒட்டி ரூ.27,000 விற்பனையாகும் தங்க மோதகம்.. இணையத்தில் வைரல்..
Golden Modak: விநாயகருக்கு மிகவும் பிடித்த இனிப்பு என்று கூறப்படும் மோதாக், விநாயகர் சதுர்த்தி விழாவில் பாரம்பரியமான முக்கிய இனிப்பாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு தங்க அலங்காரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், வழக்கமான மோதாக் இனிப்புக்கு புதிய தோற்றமும் கூடுதல் கவனமும் கிடைத்துள்ளது.
செப்டம்பர் 14, 2026: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள இனிப்புக் கடைகளில் விநாயகருக்கு பல்வேறு விதமான பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள ஒரு இனிப்புக் கடை, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் பிரம்மாண்டமான ‘கோல்டன் மோதாக்’ எனப்படும் தங்க மோதாகை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரூ. 27,000 மதிப்பில் தங்க மோதகம்:
नासिक में ₹27 हजार किलो के ‘गोल्डन मोदक’ बने आकर्षण का केंद्र
गणेश चतुर्थी पर खास अंदाज में तैयार किए गए इन मोदकों की कीमत करीब ₹27,000 प्रति किलो बताई जा रही है। खास सजावट और कीमत के चलते ये खरीदारों के बीच चर्चा में हैं।#GaneshChaturthi #GoldenModak #Nashik #GaneshUtsav pic.twitter.com/r5CaUbxmZf— @iamvikasbaliyan |🇮🇳 (@10iamvikas) September 14, 2026
ஒரு கிலோ ரூ.27,000 விலையில் விற்பனை செய்யப்படும் இந்த மோதாக், உண்ணக்கூடிய தங்கத் தகடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நாசிக்கில் வித்யா விகாஸ் சர்க்கிள் பகுதியில் அமைந்துள்ள சாகர் ஸ்வீட்ஸ் என்ற கடையில் இந்த தங்க மோதாக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தங்க மோதாக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி, அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளதுடன், ஏராளமான வாடிக்கையாளர்களையும் ஈர்த்து வருகின்றன.
மேலும் படிக்க: விநாயகர் சதுர்த்தி விழா.. வீட்டில் பிள்ளையார் பூஜைக்கு முன் செய்ய வேண்டிய சில ஏற்பாடுகள்
விநாயகருக்கு மிகவும் பிடித்த இனிப்பு என்று கூறப்படும் மோதாக், விநாயகர் சதுர்த்தி விழாவில் பாரம்பரியமான முக்கிய இனிப்பாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு தங்க அலங்காரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், வழக்கமான மோதாக் இனிப்புக்கு புதிய தோற்றமும் கூடுதல் கவனமும் கிடைத்துள்ளது.
கோலகலமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி:
தடைகளை நீக்குபவர் என போற்றப்படும் விநாயகரின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில், இந்தியா முழுவதும் இன்று கோலாகலமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் பாரம்பரியமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு பெயர் பெற்றிருந்தாலும், கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் இந்த விழாவின் பிரபலம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க: CM விஜய் கெட்டப்பில் விநாயகர்.. செம மாஸாக செல்ஃபி எடுக்கும் ரசிகர்கள்.. வைரலாகும் ‘விஜய் விநாயகர்’ கொண்டாட்டம்!
பல நாட்கள் நடைபெறும் இந்த விழா, களிமண்ணால் கைவினை முறையில் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வீடுகளுக்கு கொண்டு வருதல் அல்லது நிறுவுதல் மூலம் தொடங்குகிறது. பின்னர், புரோகிதர்கள் ‘பிராண பிரதிஷ்டை’ சடங்கின் மூலம் சிலைக்கு உயிரூட்டும் நிகழ்வை நடத்துகின்றனர். இதையடுத்து தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆரத்திகள் நடைபெறும்.
பல நாட்கள் நடைபெறும் இந்த விழா, இறுதியாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அருகிலுள்ள நீர்நிலைகளில் சடங்கு முறையில் கரைக்கப்படும் ‘விசர்ஜன்’ நிகழ்வுடன் நிறைவடைகிறது. பாரம்பரிய மேள வாத்தியக் குழுக்களுடன் நடைபெறும் இந்த ஊர்வலம், பக்தர்களால் விரும்பப்படும் விநாயகருக்கு விடை கொடுக்கும் நிகழ்வாக அமைகிறது.