Viral Video:ரோபோவுக்கும் கோபம் வருமா?’.. தள்ளிய நபரை உதைக்க முயன்ற ரோபோ! வைரல் வீடியோ
Watch Video: வீடியோவில், கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்த ஒருவர் கடைக்குள் வைக்கப்பட்டிருந்த ரோபோவின் அருகே சென்று அதனை தள்ளுகிறார். உடனடியாக ரோபோ தனது கால்களில் ஒன்றை அந்த நபரை நோக்கி நகர்த்துகிறது. இது அவரை உதைக்க முயற்சிப்பது போல் தெரிகிறது. இதனால் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
செப்டம்பர் 3, 2026: ரஷ்யாவில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடை ஒன்றில் மனித உருவம் கொண்ட ரோபோவை வாடிக்கையாளர் ஒருவர் தள்ளிய நிலையில், அதற்கு பதிலடி கொடுப்பது போல் ரோபோ செயல்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டதையடுத்து, பலரும் நகைச்சுவையாகவும், ‘தி டெர்மினேட்டர்’ திரைப்படக் காட்சிகளுடன் ஒப்பிட்டும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
வைரலான ரோபோவின் வீடியோ:
Rusya’da bir teknoloji mağazasında robot, kendisini iten müşteriye saldırmaya çalıştı. pic.twitter.com/8q16sHfhX0
— Boşuna Tıklama (@bosunatiklama) September 1, 2026
வீடியோவில், கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்த ஒருவர் கடைக்குள் வைக்கப்பட்டிருந்த ரோபோவின் அருகே சென்று அதனை தள்ளுகிறார். உடனடியாக ரோபோ தனது கால்களில் ஒன்றை அந்த நபரை நோக்கி நகர்த்துகிறது. இது அவரை உதைக்க முயற்சிப்பது போல் தெரிகிறது. இதனால் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து ரோபோவின் இயக்கம் நீடித்த நிலையில், பின்னர் அது மின்சாரம் துண்டிக்கப்பட்டு நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ரோபோவை கட்டுப்படுத்துவது கடினமாக மாறியதால் அது அணைக்கப்பட்டதாக வீடியோவுடன் வெளியிடப்பட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பல்வேறு நகைச்சுவையான கருத்துகளையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: சாட்ஜிபிடியை உண்மையான பெண் என நினைத்து பேசிய மூதாட்டி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
விவாதமாக மாறிய வைரல் கிளிப்:
“மனிதர்களின் ஆணவம் ரோபோக்களை பைத்தியமாக்கிவிட்டது” என ஒருவர் பதிவிட்டார். மற்றொருவர், “ரோபோவை மிகவும் தள்ளினால் இப்படித்தான் நடக்கும்; அதற்கும் சுயமரியாதை இருக்கிறது” என நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: குட்டி நாயை தாக்காமல் விட்ட சிறுத்தை.. அந்த மனசு தான் கடவுள்.. இணையத்தை கவர்ந்த வீடியோ!
மற்றொரு பயனர், “செயற்கை நுண்ணறிவு நமது பொறுமையை சோதிக்கிறது என்று நினைத்தோம்; ஆனால் உண்மையில் நாம் அவற்றின் பொறுமையை சோதித்துக் கொண்டிருக்கிறோம் என்பது தெரியவந்துள்ளது” என பதிவிட்டார்.
இருப்பினும், ரோபோ தானாகவே வாடிக்கையாளருக்கு எதிர்வினையாற்றியதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சிலர், ரோபோ ரிமோட் மூலம் இயக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர். “இவை ஏற்கனவே ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன” என ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.