AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ICC Ranking: டெஸ்ட் தரவரிசையில் சரிந்த பும்ரா, கில்.. படிக்கல் முன்னேற்றம்!

ICC Test Ranking: விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஏழாவது இடத்தில் நீடிக்கிறார். தற்போது அவரே இந்திய பேட்ஸ்மேன்களில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளார். இதற்கிடையில், தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் தரவரிசை 11-வது இடத்தில் மாற்றமின்றி நீடிக்கிறது.

ICC Ranking: டெஸ்ட் தரவரிசையில் சரிந்த பும்ரா, கில்.. படிக்கல் முன்னேற்றம்!
இந்திய அணி வீரர்கள்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 Sep 2026 08:00 AM IST

2026 செப்டம்பர் 2ம் தேதியான நேற்று வெளியிடப்பட்ட ஐசிசி டெஸ்ட் தரவரிசையில், இந்திய கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் சரிவைச் சந்தித்துள்ளனர். பேட்டிங் தரவரிசையில் கில் இரண்டு இடங்கள் பின்தங்கியுள்ள நிலையில், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் பும்ரா ஒரு இடம் சரிந்து மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளார். இதற்கிடையில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கல், தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளார். அதன்படி, சமீபத்தில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி (Indian Cricket Team) வீரர்களின் தரவரிசை பட்டியலை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: இந்திய அணிக்கு என்ன சிக்கல்? ஆராயும் கில்.. பிசிசிஐயிடம் கோரிக்கை!

ஒன்பதாவது இடத்திற்குச் சரிந்த கில்:

இலங்கை சுற்றுப்பயணத்தின் போது இந்திய கேப்டன் சுப்மன் கில்லின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. கில் தான் களமிறங்கிய மூன்று இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடிக்க முடிந்தது. இந்த செயல்பாடு அவரது ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கில் தற்போது இரண்டு இடங்கள் சரிந்து ஒன்பதாவது இடத்திற்கு வந்துள்ளார். இருப்பினும், இந்திய பேட்ஸ்மேன்களில் ரிஷப் பண்ட் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அவருக்கு முன்னால் நீடிக்கின்றனர்.

இந்த பட்டியலில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஏழாவது இடத்தில் நீடிக்கிறார். தற்போது அவரே இந்திய பேட்ஸ்மேன்களில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளார். இதற்கிடையில், தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் தரவரிசை 11-வது இடத்தில் மாற்றமின்றி நீடிக்கிறது.

ஐந்து இடங்கள் முன்னேறிய படிக்கல்:

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேவ்தத் படிக்கல் மிகச் சிறப்பாக விளையாடினார். இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதங்கள் உட்பட மொத்தம் 328 ரன்கள் எடுத்தார். இந்த சிறப்பான ஆட்டம் ஐசிசி தரவரிசையில் அவருக்குப் பயனளித்துள்ளது. படிக்கல் தற்போது 5 இடங்கள் முன்னேறி 54-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இரண்டாம் இடத்தை இழந்த பும்ரா:

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஒரு இடம் சரிந்துள்ளார். அவர் இரண்டாம் இடத்திலிருந்து மூன்றாம் இடத்திற்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார். பும்ரா இலங்கை சுற்றுப்பயணத்தில் முழங்கால் காயம் காரணமாக இந்திய அணியுடன் பயணிக்க முடியவில்லை. பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் மற்றும் நியூசிலாந்தின் மாட் ஹென்றி ஆகியோர் அவருக்கு முன்னால் உள்ளனர்.

ALSO READ: 2027 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா விளையாட மாட்டாரா? நாளை கூட்டத்தை கூட்டும் பிசிசிஐ!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும், தொடரில் அவர் பங்கேற்பது அவரது உடற்தகுதி மற்றும் தேவையான அனுமதிகளைப் பொறுத்தே அமையும். குறிப்பாக, வரவிருக்கும் சர்வதேசப் போட்டி அட்டவணையைக் கருத்தில் கொள்ளும்போது, ​​இந்திய அணிக்கு பும்ராவின் உடற்தகுதி மிகவும் முக்கியமானதாக உள்ளது.

Follow Us