AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Viral Video : நேபாள் பெரும் வெள்ளத்தில் தப்பிய குடும்பம்.. வைரலாகும் வீடியோ!

Family Escaped In Nepal Flash Flood | நேபாள் பெரும் வெள்ளம் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வகையில், நேபாள் வெள்ளத்தில் குடும்பம் ஒன்று தப்பியது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : நேபாள் பெரும் வெள்ளத்தில் தப்பிய குடும்பம்.. வைரலாகும் வீடியோ!
உயிர் பிழைத்த குடும்பம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 29 Aug 2026 23:58 PM IST

நேபாள் (Nepal) பெரு வெள்ளம் (Huge Flash Flood) தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வகையில், நேபாள் வெள்ளத்தில் குடும்பம் ஒன்று அதிர்ஷவசமாக தப்பித்தது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ஆச்சர்யத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நேபாள் பெரும் வெள்ளத்தில் தப்பித்த குடும்பம்

நேபாளில் ஆகஸ்ட் 26, 2026 அன்று பெரும் வெள்ளம் ஏற்பட்டது. பனிப்பாறை உடைந்து ஆற்றில் விழுந்ததன் காரணமாக இந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. இந்த துயர சம்பவத்தில் நூற்றக்கணக்கான மக்கள் பலியாகியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானவர்கள் மாயமாகியுள்ளனர்.

இதையும் படிங்க : Viral Video: டிஜே இசையின் அதிர்வால் கடையில் இருந்த பொருட்கள் விழுந்த வைரல் வீடியோ.. இணையத்தில் ஏற்பட்ட விவாதம்

இந்த நிலையில், இந்த வெள்ளத்தில் சிக்கி பலியானவர்கள் தொடர்பான வீடியோக்களும், அங்கு நடைபெறும் மீட்பு பணி, வெள்ளம் ஏற்பட்ட சிசிடிவி காட்சிகள் என தினமும் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தான் கடும் வெள்ளத்தில் குடும்பம் ஒன்று தப்பித்தது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளம் ஓடும் இடங்களில் இருக்கும் வீடுகள் அடித்துச் செல்லப்படும் நிலையில், ஒரே ஒரு வீடு மட்டும் நிலைத்து நிற்கிறது. அந்த வீட்டின் பால்கனியில், ஒரு குடும்பம் ஒன்று நின்றுக்கொண்டு இருக்கிறது. ஆனால், வெள்ளத்தால் அவர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்கள் அனைவரும் அந்த வீட்டின் பால்கனியில் பாதுகாப்பாக இருப்பதை அந்த வீடியோ காட்டுகிறது.

இதையும் படிங்க : Viral Video : குழந்தைக்காக கேப் ஓட்டும் பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us