சென்னை சென்டிரல் – அரக்கோணம் வரை.. புதிய ஏசி மின்சார ரயில் சேவை தொடக்கம்!
New AC Electric Train Service In Chennai | சென்னையில் பெரும்பாலான பொதுமக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர். இந்த நிலையில், சென்னை சென்டிரல் - அரக்கோணம் இடையே புதிய ரயில் ஏசி மின்சார சேவை நேற்று (அக்டோபர் 23, 2026) முதல் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை, அக்டோபர் 24 : சென்னை சென்டிரல் – அரக்கோணம் (Chennai Central – Arakkonam) இடையே ஏசி மின்சார ரயில் சேவை (AC Train Service) நேற்று (அக்டோபர் 23, 2026) தொடங்கியது. சென்னையில் பெரும்பாலான பொதுமக்கள் ரயில் போக்குவரத்தை நம்பியுள்ள நிலையில், இந்த ரயில் சேவைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ரயில் சேவை குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னையில் புதிய மின்சார ரயில் சேவை தொடக்கம்
சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஏசி மின்சார ரயில், கடந்த ஆண்டு தெற்கு ரயில்வே வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ரயில்வேயின் முதல் ஏசி மின்சார ரயில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தான், தற்போது இரண்டாவது ஏசி ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : நெருங்கும் தீபாவளி – தமிழகம் முழுவதும் 45 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை
சென்னை சென்டிரல் – அரக்கோணம் வழியே இயங்கும் ரயில்
இந்த புதிய ஏசி மின்சார ரயில் சென்னை சென்டிரல் – அரக்கோணம் வழித்தடத்தில் இயங்குவதற்கான ஒப்புதலை ரயில்வே வாரியம் வழங்கியுள்ளது. இந்த நிலையில் தான், சென்னை சென்டிரல் – அரக்கோணம் இடையே அக்டோபர் 23, 2026 முதல் இந்த ஏசி மின்சார ரயில் சேவை தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : விமான எரிபொருள் மீதான வாட் வரியை குறைத்த தமிழக அரசு – விமான கட்டணம் குறையுமா?