AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வங்கி மேலாளர் வீட்டில் 20 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சுற்றுலா சென்றபோது கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்!

20 Sovereign Gold Stolen Bank Manager's House | சேலத்தில் வங்கி மேலாளர் ஒருவரின் வீட்டில் இருந்து சுமார் 20 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில், இந்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது.

வங்கி மேலாளர் வீட்டில் 20 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சுற்றுலா சென்றபோது கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 24 Oct 2026 07:48 AM IST

சேலம், அக்டோபர் 24 : சேலத்தில் (Salem) வங்கி மேலாளர் வீட்டில் சுமார் 20 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கி மேலாளர் தனது குடும்பத்துடன் கேரளாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில், வீட்டில் இருந்த நகைகள் திருடப்பட்டு இருந்ததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளானர். இந்த நிலையில், வங்கி மேலாளர் வீட்டில் நகைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

வங்கி மேலாளர் வீட்டில் 20 சவரன் தங்க நகைகள் கொள்ளை

சேலம் அம்மாப்பேட்டை சக்தி நகரை சேர்ந்தவர் தேவபிரசன்னா. 39 வயதாகும் இவர் வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் அக்டோபர் 17, 2026 அன்று தனது குடும்னத்துடன் கேரளாவுக்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த அவர், அக்டோபர் 22,2026 அன்று நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார்.

இதையும் படிங்க : Tamil Nadu Rains: வங்கக்கடலில் உருவாகும் புயல்.. இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே உள்ளே சென்று பார்த்த அவர், பீரோவில் வைத்திருந்த சுமார் 20 சவரன் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். இந்த நிலையில், உடனடியாக அது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார்

போலீசார் விசாரணையில் தேவ பிரசன்னா வீட்டில் இல்லாத நேரம் பார்த்து திட்டமிட்டு திருட்டு சம்பவம் நடைபெற்றது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், வீட்டில் இருந்த தடையங்களை சேகரித்த போலீசார், அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க : நெருங்கும் தீபாவளி – தமிழகம் முழுவதும் 45 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை

சுற்றுலா சென்ற வங்கி மேலாளர் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us