AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நாளை மீண்டும் திறக்கப்படும் வண்டலூர் உயிரியல் பூங்கா.. கட்டுப்பாடுகள் தீவிரம்!

Vandalur Zoo Reopens From October 25th | சென்னையின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளது. இந்த நிலையில், பறவைக் காய்ச்சல் காரணமாக மூடப்பட்டு இருந்த நிலையில், மூன்று நாட்களுக்கு பிறகு நாளை (அக்டோபர் 25, 2026) மீண்டும் திறக்கப்பட உள்ளது.

நாளை மீண்டும் திறக்கப்படும் வண்டலூர் உயிரியல் பூங்கா.. கட்டுப்பாடுகள் தீவிரம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 24 Oct 2026 08:11 AM IST

சென்னை, அக்டோபர் 24 : பறவைக் காய்ச்சல் (Bird Flu) காரணமாக சென்னையில் உள்ள வண்டலூர் பூங்கா (Chennai Vandalur Zoo) மூடப்பட்டு இருந்த நிலையில், நாளை (அக்டோபர் 25, 2026) முதல் அது மீண்டும் திறக்கப்பட உள்ளது. பூங்கா மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், பறவைகளின் இருப்பிடங்களை மட்டும் பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை வண்டலூர் பூங்கா மீண்டும் திறக்கப்படுவது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பறவைக் காய்ச்சல் காரணமாக மூடப்பட்ட பூங்கா

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த நிலையில், அங்கிருக்கும் நீர்வாழ் பறவைகள் இடையே எச்5என்1 என்ற பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக அக்டோபர் 22, 2026 முதல் பூங்காவிற்கு பார்வையாளர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு, பூங்கா மூடப்பட்டது.

இதையும் படிங்க : கல்லூரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்.. “சிங்கப்பெண் அதிரடிப்படை எங்கே போனது?”.. தவெக அரசை விளாசிய இபிஎஸ்!

முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன

பறவைகள் மத்தியில் பறவைக் காய்ச்சல் காணப்பட்ட நிலையில், பூங்கா முழுவதும் விரிவான கிருமிநாசினி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து பறவைக் காய்ச்சல் பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் தான், மூன்று நாட்களாக தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், நாளை (அக்டோபர் 25, 2026) பூங்கா மீண்டும் திறக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க : Tamil Nadu Rains: வங்கக்கடலில் உருவாகும் புயல்.. இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை

தொடர்ந்து பறவைகளை கண்காணித்து வரும் மருத்துவ குழுவினர்

தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பறவைகள் உள்ள பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, அந்த இடங்களுக்கு பார்வையாளர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விலங்கு பராமரிப்பு குழுவினர் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் பறவைகளின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தற்போது பறவைகள் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் உள்ளதாக மருத்துவ அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நிலையில் தான், பூங்காவை மீண்டும் திறக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us