AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கல்லூரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்.. “சிங்கப்பெண் அதிரடிப்படை எங்கே போனது?”.. தவெக அரசை விளாசிய இபிஎஸ்!!

Edappadi Palaniswami Slams TVK: நாகர்கோவிலில் பேருந்துக்காகக் காத்திருந்த கல்லூரி மாணவிக்கு உதவுவது போல் நடித்து தவெக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், குற்றவாளி மீது எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றிச் சட்ட நடவடிக்கை எடுக்க அவர் வலியுறுத்தியுள்ளார்.

கல்லூரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்.. “சிங்கப்பெண் அதிரடிப்படை எங்கே போனது?”.. தவெக அரசை விளாசிய இபிஎஸ்!!
எடப்பாடி பழனிசாமி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 24 Oct 2026 06:36 AM IST

சென்னை, அக்.24: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் பகுதியில் கல்லூரிக்குச் செல்வதற்காகப் பேருந்துக்காகக் காத்திருந்த பச்சிளம் வயதுக் கல்லூரி மாணவிடம், மனிதாபிமானமற்ற முறையில் உதவி செய்வது போல நடித்துத் தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ள செய்தி தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளும் இளம்பெண்களும் தாங்கள் செல்லும் இடங்களில் பாதுகாப்பாகக் கல்வி பயிலும் சூழல் கேள்விக்குறியாகி வரும் நிலையில், ஆளுங்கட்சி அல்லது அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் இது போன்ற கொடூரச் செயல்களில் ஈடுபடுவது ஒட்டுமொத்த சமூகத்தையும் தலைகுனியச் செய்துள்ளது. சட்டம்-ஒழுங்கைப் பேண வேண்டியவர்களின் பின்னணியில் இருப்பவர்களே குற்றச் செயல்களில் ஈடுபடுவது பொதுமக்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: Chennai Crime: இன்ஸ்டாகிராம் பிரபலம் ஹரிஷ் தற்கொலை வழக்கில் யூடியூபர் ஜேசன் சாமுவேல் கைது! தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை

தவெக மீது கடுமையான விமர்சனம்:

இந்தச் சம்பவம் குறித்துத் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசுக்கு எதிராகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். “பெண்களைக் காப்பதில் நம்பர் 1 ஆட்சியாக இருப்பதாகத் தம்பட்டம் அடிக்கும் முதல்வர், தனது கட்சிக்காரர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை மறந்துவிட்டாரோ?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “ஆட்சிதான் மாறியதே தவிர காட்சி மாறவில்லை” என்பதைப் போல தற்போது பாலியல் தொல்லை அளிப்பவர்களுக்கான முகவரியாகத் தவெக மாறி நிற்பதாகவும், பெண்களுக்கும் சிறுமிகளுக்குமான பாதுகாப்புக் கேள்விக்குறியாகி இருப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.

‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ எங்கே?

தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ தற்போது எந்த முடக்க நிலைக்கும் (Hibernation Mode) சென்றுவிட்டது என்று தெரியவில்லை என விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அரசின் நிர்வாகத் தோல்வியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகப் புகாருக்குள்ளான தவெக நிர்வாகி கிறிஸ்டோபர் மீது எந்தவிதமான அரசியல் குறுக்கீடுகளும் இன்றி, காவல்துறையினர் உடனடியாக உரிய மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார். குற்றவாளிகளுக்குத் தராதரம் பார்க்காமல் தண்டனை வழங்கப்பட்டால் மட்டுமே இது போன்ற தவறுகள் மீண்டும் நடவாமல் தடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் படிக்க: ரவுடி சுள்ளான் மதன் கொலை வழக்கு.. சரித்திரப் பதிவேட்டு குற்றவாளி உள்பட மேலும் இருவர் கைது.. போலீசார் அதிரடி!!

“நமக்கு நாமே பாதுகாப்பு” என்ற அவல நிலை:

தமிழகத்தின் நிலவி வரும் சட்டம்-ஒழுங்குச் சீர்குலைவைக் சுட்டிக்காட்டிப் பெண்களுக்கும் சிறுமிகளுக்குமான முக்கிய எச்சரிக்கை ஒன்றையும் அவர் விடுத்துள்ளார். முகம் தெரியாத நபர்கள், குறிப்பாகத் தவெக-வினர் உதவி செய்வதாக அருகில் வந்தால் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், உடனடியாகக் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், தற்காப்புக்காகத் தேவையான அனைத்து உபகரணங்களையும் தங்களது கைப்பையில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ள அவர், “நமக்கு நாமே பாதுகாப்பு” என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதே இந்த ஆட்சியின் மாபெரும் அவல நிலை என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Follow Us