AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu News Live: வங்கக்கடலில் உருவாகும் புயல்.. 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..

Tamil Nadu Latest News Live Updates in Tamil : அக்டோபர் 24, 2026 இன்று திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 24 Oct 2026 07:10 AM IST
Share
Tamil Nadu News Live: வங்கக்கடலில் உருவாகும் புயல்.. 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..
மாதிரி புகைப்படம்

LIVE NEWS & UPDATES

  • 24 Oct 2026 07:45 AM (IST)

    Rain Alert: 31 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. எங்கெல்லாம்?

    மேலும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிவகங்கை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 24 Oct 2026 07:30 AM (IST)

    Rainfall Alert: இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..

    அக்டோபர் 24ஆம் தேதியான இன்று, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • 24 Oct 2026 07:20 AM (IST)

    அக்டோபர் 26ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகும் புயல்?

    அக்டோபர் 26ஆம் தேதி காலை மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் மேலும் வலுப்பெற்று அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 24 Oct 2026 07:06 AM (IST)

    Weather Update: வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்,,

    அக்டோபர் 23ஆம் தேதி மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் இந்த அமைப்பு, நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் அக்டோபர் 24, 2026 இன்று திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றஉம் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் வானிலை விவரங்களை அப்டேட்களாக பார்க்கலாம். கனமழை காரணமாக கொடைக்கானல், தாண்டிக்குடி பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மண் சரிவு, மரங்கள் விழுதல் போன்றவை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் மக்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் நிலை நிலவுகிறது என அவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.  அதுமட்டுமின்றி, தமிழ்நாடு, இந்தியா, உலகம் என அனைத்து கோண செய்திகளையும் இங்கே பார்க்கலாம்

Published On - Oct 24,2026 7:00 AM

Follow Us