AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கொடைக்கானலில் மலைச்சரிவு, மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு! சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம் என அறிவுறுத்தல்..

Kodaikanal Tourist Advisory: கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அடுத்த இரண்டு நாட்களுக்குச் சுற்றுலாப் பயணிகள் அப்பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், சுற்றுலாப் பயணிகள் அடுத்த இரண்டு நாட்களுக்குக் கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கொடைக்கானலில் மலைச்சரிவு, மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு! சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம் என அறிவுறுத்தல்..
வெள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்த வெள்ளம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 24 Oct 2026 07:05 AM IST

அக்டோபர் 24, 2026: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாகப் பல்வேறு இடங்களில் மலைச்சரிவு, மரங்கள் சாய்ந்து விழுதல், சாலைகள் சேதமடைதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும், மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனப் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என அறிவுறுத்தல்

குறிப்பாக, கொடைக்கானல், தாண்டிக்குடி மற்றும் மேல்மலைப் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை நிலவரங்கள் தெரிவிக்கும் சூழலில், சுற்றுலாப் பயணிகள் அடுத்த இரண்டு நாட்களுக்குக் கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

சாலைகளில் விழுந்த மரங்கள்; போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் பகுதியில் பெய்த கனமழையால் உட்வில் ரோடு, செண்பகனூர் மற்றும் டைகர் சோலை உள்ளிட்ட இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் அந்தப் பகுதிகளில் போக்குவரத்துக்குத் தடங்கல் ஏற்பட்டது. தகவலறிந்ததும் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க: வங்கக்கடலில் உருவாகும் புயல்.. இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை…

மின்கம்பங்கள் சேதம்; பல இடங்களில் மின்தடை

தொடர் கனமழையின் காரணமாகக் கொடைக்கானல் நகர், தாண்டிக்குடி மற்றும் மேல்மலைப் பகுதிகளில் பல இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

வெள்ளி நீர்வீழ்ச்சியில் அதிகரித்த நீர்வரத்து


தொடர் மழையின் காரணமாகக் கொடைக்கானலில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அங்குப் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் பாலத்தைக் கடந்து சென்றதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 16 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கல்லூரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்.. “சிங்கப்பெண் அதிரடிப்படை எங்கே போனது?”.. தவெக அரசை விளாசிய இபிஎஸ்!!

சுற்றுலாப் பயணிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை

கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அடுத்த இரண்டு நாட்களுக்குச் சுற்றுலாப் பயணிகள் அப்பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக, மலைப்பாதைகளில் பயணிப்பதைத் தவிர்க்கவும், சாலைகளில் மரங்கள் அல்லது பாறைகள் விழுந்துள்ள பகுதிகளைக் கடந்து செல்ல முயற்சிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடும் இடங்களிலும், மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளிலும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

Follow Us