AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

School Leave: நீலகிரியில் கொட்டும் கனமழை.. 6 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

Nilgiris School Leave: நீலகிரியில் தொடர்ந்து கனமழை பதிவாகி வரும் நிலையில், உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய ஆறு தாலுகாக்களில் செயல்படும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

School Leave: நீலகிரியில் கொட்டும் கனமழை.. 6 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 24 Oct 2026 07:59 AM IST

அக்டோபர் 24, 2026: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, இன்று (அக்டோபர் 24) ஆறு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய ஆறு தாலுகாக்களில் செயல்படும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மலைப்பகுதிகளில் பெய்யும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுதல் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்ட நிர்வாகம் இந்த விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று (அக்டோபர் 24) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் இந்த வானிலை அமைப்பு, அக்டோபர் 26ஆம் தேதி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயல் அடுத்தடுத்த நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா கடற்கரைப் பகுதிகளை நோக்கிச் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: கொடைக்கானலில் மலைச்சரிவு, மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு! சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம் என அறிவுறுத்தல்..

இதற்கிடையே, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழகப் பகுதிகள், கேரளப் பகுதிகளில் நிலவிய வளிமண்டலச் சுழற்சி தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப் பகுதிகளில் நிலவுகிறது. இந்த வானிலை அமைப்புகளின் காரணமாகத் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

இன்று (அக்டோபர் 24) திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: வங்கக்கடலில் உருவாகும் புயல்.. 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..

குறிப்பாக, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் சூழலில், தாழ்வான பகுதிகளில் வசிப்போர் மற்றும் மலைப்பாதைகளில் பயணிப்போர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

31 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:

மேலும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிவகங்கை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Follow Us