AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video: டிஜே இசையின் அதிர்வால் கடையில் இருந்த பொருட்கள் விழுந்த வைரல் வீடியோ.. இணையத்தில் ஏற்பட்ட விவாதம்..

எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், பரபரப்பான வணிகப் பகுதியில் உள்ள கடை ஒன்றுக்கு வெளியே ஊர்வலம் செல்வதும், டிஜே இசையின் அதிகப்படியான பேஸ் ஒலி கேட்பதும் பதிவாகியுள்ளது. இதனிடையே, கடைக்குள் இருந்த பொருட்கள் அலமாரிகளில் இருந்து தொடர்ந்து கீழே விழுவதும், கடைக்காரர் அதிருப்தியுடன் இருப்பதும் காட்சிகளில் தெரிகிறது.

Viral Video: டிஜே இசையின் அதிர்வால் கடையில் இருந்த பொருட்கள் விழுந்த வைரல் வீடியோ.. இணையத்தில் ஏற்பட்ட விவாதம்..
அதீத ஒலியால் கடைக்காரருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி.. வைரல் வீடியோ..
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 24 Aug 2026 19:10 PM IST

ஆகஸ்ட் 24, 2026: கடைக்கு வெளியே நடைபெற்ற ஊர்வலத்தில் அதிக ஒலியுடன் இசை ஒலிக்கப்பட்டதால், கடைக்குள் இருந்த பொருட்கள் அதிர்வில் கீழே விழுந்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தொடர்பாக பண்டிகை கொண்டாட்டங்களின்போது ஒலி அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் என இணையவாசிகள் விவாதித்து வருகின்றனர்.

அதிக ஒலியுடன் டி.ஜே இசை- இணையத்தில் வைரலான வீடியோ:

எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், பரபரப்பான வணிகப் பகுதியில் உள்ள கடை ஒன்றுக்கு வெளியே ஊர்வலம் செல்வதும், டிஜே இசையின் அதிகப்படியான பேஸ் ஒலி கேட்பதும் பதிவாகியுள்ளது. இதனிடையே, கடைக்குள் இருந்த பொருட்கள் அலமாரிகளில் இருந்து தொடர்ந்து கீழே விழுவதும், கடைக்காரர் அதிருப்தியுடன் இருப்பதும் காட்சிகளில் தெரிகிறது.

இது இந்து மத பண்டிகை கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வீடியோவைப் பகிர்ந்த எக்ஸ் பயனர், இதுபோன்ற கொண்டாட்டங்கள் இந்து மதத்தின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க: கண்கொள்ளாக்காட்சி.. மலைகளின் பள்ளத்தாக்குகள் வழியாக வந்தே பாரத்.. என்ன ரூட் இது?

வைரலான வீடியோவால் எழுந்த விவாதம்:


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளில் இதுபோன்ற அதிக ஒலி கொண்ட கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கலாமா என்பது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சிலர் இதுபோன்ற ஊர்வலங்கள் மற்றும் சாலை நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். அதேவேளை, கடைக்காரர் கடையை மூடிவிட்டு வெளியேறியிருக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மற்றொரு பயனர், பொருட்கள் தொடர்ந்து கீழே விழுந்தபோதும் கடைக்காரர் அவற்றை எடுக்காமல் அமர்ந்திருப்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபோன்ற அதிக ஒலி கொண்ட நிகழ்வுகள் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் படிக்க: குழந்தைக்காக கேப் ஓட்டும் பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

மேலும், அதிக ஒலி காரணமாக சமூக நல்லிணக்கம் மற்றும் பொது ஒழுங்கு பாதிக்கப்படுவதாகவும் சிலர் கவலை தெரிவித்துள்ளனர். திருமண நிகழ்ச்சிகளின்போதும் அதிக ஒலி கொண்ட இசையால் தங்களுக்கு சிரமம் ஏற்பட்டதாக ஒருவர் தனது தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ மற்றும் அதனுடன் பகிரப்பட்டுள்ள தகவல்கள் சமூக வலைதளப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டவை. இதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

Follow Us