AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : பாம்பு கடித்த பெண்ணுக்கு பேய் ஓட்டியதால் அதிர்ச்சி.. வைரலாகும் ஷாக் வீடியோ!

Snake Bite Victim Exorcised In Government Hospital | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பாம்பு கடித்த இளம் பெண்ணுக்கு பேய் ஓட்டப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Viral Video : பாம்பு கடித்த பெண்ணுக்கு பேய் ஓட்டியதால் அதிர்ச்சி.. வைரலாகும் ஷாக் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Aug 2026 22:45 PM IST

உலகம் மருத்துவத்திலும், விஞ்ஞானத்திலும் பல்வேறு முன்னேற்றங்களை கண்டு வருகிறது. இதுஒருபுறம் இருக்க, மக்கள் மத்தியில் மூட நம்பிக்கை இன்றளவும் குறையாமல் உள்ளது. அந்த வகையில், ஹரியானா (Haryana) மாநிலத்தில் பாம்பு கடித்த இளம் பெண்ணுக்கு பேய் ஓட்டப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், சமூக ஊடகங்கலில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பாம்பு கடித்த இளம் பெண்ணுக்கு பேய் ஓட்டியதால் அதிர்ச்சி

ஹரியானா மாநிலம், பல்வால் பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம் பெண். இவர் தோட்டத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்த நிலையில், அவரை பாம்பு கடித்துள்ளது. அதனால், பதறிப்போன குடும்பத்தினர் இளம் பெண்ணை உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள், இளம் பெண்ணின் நிலையை உணர்ந்து அதற்கு ஏற்ப சிகிச்சை அளித்துள்ளனர்.

இதையும் படிங்க : Viral Video : பணி மாறுதல் பெற்று செல்லும் ஆசிரியர்.. கேட்டை மூடிய மாணவர்கள்.. வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பாம்பு கடித்ததால் பாதிக்கப்பட்ட இளம் பெண் மயக்கத்தில் தரையில் அமர்ந்துக்கொண்டு இருக்கிறார். அவருக்கு அருகே ஒருவர் கையில் வேப்பிலை வைத்துக்கொண்டு இளம் பெண்ணுக்கு பேய் ஓட்டுகிறார். இளம் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனைக்கு வெளியே இருந்த அந்த நபர், தனக்கு பாம்பு விஷத்தை எடுக்கும் சக்தி உள்ளதாக கூறியுள்ள நிலையில், இளம் பெண்ணின் குடும்பத்தார் அவரை அழைத்துச் சென்று இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க : வடிவேலு ஸ்டைலில்… திருட வந்த இடத்தில் துணி துவைத்து குளித்து ஜாலியாக இருந்த திருடன் – வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us