Viral Video : பணி மாறுதல் பெற்று செல்லும் ஆசிரியர்.. கேட்டை மூடிய மாணவர்கள்.. வைரலாகும் வீடியோ!
School Students Love Towards Their Teacher | இணையத்தில் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், மாணவர்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் ஒருவர் பணி மாறுதல் பெற்று செல்லும் நிலையில், மாணவர்கள் பள்ளி கேட்டை மூடும் வீடியோ வைரலாகி வருகிறது.
உலகத்தில் நம்மை சுற்றி நடைபெறும் சில சுவாரஸ்யமான மற்றும் முக்கிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், மகாராஷ்டிராவில் (Maharashtra) பணி மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கும் செல்லும் ஆசிரியரின் பிரிவை தாங்க முடியாமல், பள்ளி மாணவர்கள் பள்ளியின் கேட்டை மூடியது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆசிரியரை பிரிய மனமில்லாமல் மாணவர்கள் செய்த செயல்
பொதுவாக பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்களை பார்த்தாலே சற்று பயம் உண்டாகும். ஆனால், எல்லா பள்ளிகளிலும் ஒரு ஆசிரியர் இருப்பார். அவர் மீது மாணவர்களுக்கு தனி பிரியம் இருக்கும். மாணவர்களிடம் இயல்பாகவும், அன்பாகவும் நடந்துக்கொள்ளும் ஆசிரியர்களுக்கு எப்போது மாணவர்களிடம் இருந்து அளவில்லாத அன்பு கிடைக்கும். அந்த வகையில், மகாராஷ்டிடா ஆசிரியர் ஒருவருக்கு கிடைத்த அளவில்லாத அன்பு குறித்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : பஞ்சாப்பில் சாம்பி டிரக்ஸ் பயன்படுத்திய இளைஞர்கள்?.. அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாலி வரும் அந்த வீடியோவில், பணி இட மாறுதல் பெற்ற அந்த ஆசிரியர் பள்ளியை விட்டு வெளியேறுகிறார். அவர் வெளியேறும்போது அந்த பள்ளி மாணவர்கள் அனைவரும் ஒன்றுக்கூடி அழுது கத்தி கூச்சலிடுகின்றனர். இதன் காரணமாக பள்ளி பரபரப்பாக காணப்படுகிறது. அந்த ஆசிரியர் பள்ளியின் கேட்டை நோக்கிச் செல்லும் நிலையில், அங்கிருக்கும் மாணவர்கள் சிலர் உடனடியாக ஓடிச் சென்று கேட்டை மூடுகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : கணவரின் அஸ்தியை கரைக்க இந்தியா வந்த ஜெப்பானிய பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அந்த ஆசிரியர் பேரன்புக்கு சொந்தக்காரர் என பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.