AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : கணவரின் அஸ்தியை கரைக்க இந்தியா வந்த ஜெப்பானிய பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Japan Woman Travelled Thousands Of Kilometers For Husband's Last Wish | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ஜெப்பான் பெண் ஒருவர் தனது கணவரின் ஆசைக்காக ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் கடந்து வந்துள்ளார்.

Viral Video : கணவரின் அஸ்தியை கரைக்க இந்தியா வந்த ஜெப்பானிய பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Aug 2026 23:04 PM IST

சமூக ஊடகங்களின் உதவியால் உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சில சுவாரஸ்ய மற்றும் முக்கிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவ்வாறு வைரலாகும் சில வீடியோக்கள் ஆச்சர்யத்தையும், சில வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும். அந்த வகையில், ஜெப்பான் பெண் ஒருவர் தனது கணவரின் அஸ்தியை பாகேஸ்வரில் கரைத்தது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கணவரின் அஸ்தியை கரைக்க இந்தியா வந்த ஜெப்பானிய பெண்

உத்தரகாண்டில் ஒரு உணர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதாவது ஜெப்பான் பெண் ஒருவர் சுமார் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் கடந்து, தனது கணவரின் ஆசைக்காக இந்தியா வந்து அவரது கடைசி ஆசையை நிறைவேற்றியுள்ளார். அதாவது, மியாகோ கெட்லெட் என்ற பெண் தனது கணவனின் அஸ்தியை இந்தியா கொண்டுவந்து சரயு நதியில் கரைத்துள்ளார்.

இதையும் படிங்க : Viral Video : சாலையோர வசிப்பவரை எட்டி உதைத்த கண்டக்டர்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், மியகோ கெட்லெட் தனது கணவர் ராபர்ட் கெட்லெட் அஸ்தியை புனிய சரயு நதியில் கரைக்கிறார். அவருடன் சில இந்தியர்கள் நின்றுக்கொண்டு இருக்கின்றனர். ராபர்ட் 2022 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், அது முதலே தனது கணவரின் அஸ்தியை பாகேஸ்வரில் கரைக்க வேண்டும் என அவரது மனைவி காத்துக்கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில் தான், 4 ஆண்டுகளுக்கு பிறகு அவர் தனது கணவரின் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

இதையும் படிங்க : Viral Video : இறந்த டால்பின் குட்டியை சுமந்துக்கொண்டு வலம் வரும் தாய்.. கண் கலங்க வைக்கும் வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us