AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : சாலையோர வசிப்பவரை எட்டி உதைத்த கண்டக்டர்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

Conductor Kicked Homeless Man | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், சாலையோரம் வசிக்கும் நபரை கண்டக்டர் எட்டி உதைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Viral Video : சாலையோர வசிப்பவரை எட்டி உதைத்த கண்டக்டர்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 05 Aug 2026 20:16 PM IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். இந்த வீடியோக்களில் நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்ய மற்றும் குற்ற சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் வைரலாகும். அந்த வகையில், வீடு இல்லாமல், சாலை ஓரத்தில் வசித்துக்கொண்டு இருந்த நபர் ஒருவர் பேருந்தில் ஏற முயற்சி செய்தபோது அவரை கண்டக்டர் தாக்கும் சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

சாலையோரம் வசிப்பவரை தாக்கிய போலீஸ்

பெங்களூரில் (Bengaluru) பேருந்தில் ஏற முயற்சி செய்த வீடற்ற நபரை, பேருந்து கண்டெக்டர் தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், அந்த கண்டக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பலரும் அந்த கண்டக்டரின் செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : Viral Video : அமெரிக்காவா, இந்தியாவா?.. டைம்ஸ் ஸ்கொயரில் 1 மணி நேரத்தில் 100 இந்தியர்களை கண்டுபிடித்த இன்ஃப்ளூயன்சர்!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், சாலையோரம் வசிப்பவர் ஒருவர் பேருந்தில் ஏற முயற்சி செய்கிறார். அப்போது அந்த பேருந்தில் இருக்கும் கண்டக்டர், அந்த நபரை எட்டி உதைக்கிறார். இதால், அந்த நபர் சாலை ஓரம் சென்று விழுகிறார். இவை அனைத்தையும், சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

இதையும் படிங்க : Viral Video : காரின் டயர் மீது மோதி வெடிக்க செய்த காட்டெருமை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த கண்டக்டரின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Follow Us