Viral Video : காவலாளிக்கு கல்லூரி மாணவிகள் அளித்த பரிசு.. இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!
College Students Gifted Watchman A Portrait Of Him | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், கல்லூரி மாணவர்கள் காவலாளிக்கு அவரது புகைப்படத்தை வரைந்து பரிசலித்த வீடியோ வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். சில சம்பவங்கள் மற்றும் மனிதர்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி மிகவும் பேசுபொருளாக மாறும். அந்த வகையில், கல்லூரியின் காவலாளிக்கு கல்லூரி மாணவிகள் அளித்த பரிசு தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வெளியாகி வைரலாகும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
காவலாளிக்கு கல்லூரி மாணவிகள் அளித்த பரிசு
மனிதர்கள் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு அன்பு, பாசம் மிகவும் முக்கியம் ஆகும். பிறரால் நாம் நேசிக்கப்படுகிறோம் என்ற உணர்வு தான், நம்மை மேலும் மேலும் வாழ்க்கையை நோக்கி நகரச் செய்யும். இவ்வாறு மனிதர்கள் நேசிக்கப்படுவது தொடர்பான வீடியோக்கள் பல இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் தான், காவலாளிக்கு கல்லூரி மாணவிகள் பரிசு அளித்தது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : மலை வளைவில் நடந்த விபத்து.. நூலிழையில் உயிர்தப்பிய பைக்கர்.. வைரல் வீடியோ!
இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் கல்லூரி மாணவிகள் சிலர், தங்களது கல்லூரி காவலாளிக்கு பரிசு ஒன்றை வழங்குகின்றனர். அவர் அதனை மிகவும் மகிழ்ச்சியுடன் திறந்து பார்க்கிறார். அதில், அந்த காலாளியை தான் அந்த மாணவிகள் வரைந்து கொடுத்துள்ளனர். அதனை பார்த்து அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : இலவச உணவுக்காக முந்தி அடித்துக்கொண்டு சென்ற பங்கேற்பாளர்கள்.. வைரல் வீடியோ!
அன்பு, பாசம், இறக்கம் தான் மனிதர்களை உயிரிப்புடனும் மன மகிழ்ச்சியுடனும் வைத்திருக்கும். இதுபோன்ற சம்பவங்கள் மனிதர்கள் மனதில் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தி, அவர்கள் உற்சாகமாக வாழ வழிவகை செய்கிறது என பலரும் அந்த வீடியோவுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.