AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : இலவச உணவுக்காக முந்தி அடித்துக்கொண்டு சென்ற பங்கேற்பாளர்கள்.. வைரல் வீடியோ!

Attendees of a Tech Company Debate Rush For Free Food | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் வழங்கப்பட்ட இலவச உணவுக்காக அந்த நிறுவனத்தின் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் முந்தி அடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : இலவச உணவுக்காக முந்தி அடித்துக்கொண்டு சென்ற பங்கேற்பாளர்கள்.. வைரல் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Jul 2026 22:00 PM IST

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் உலகில் நம்மை சுற்றி நடைபெறும் பல சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பெங்களூரில் (Bengaluru) உள்ள ஒரு தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடத்தப்பட்ட கூட்டம் இலவச உணவு வழங்கப்பட்ட நிலையில், அந்த உணவை வாங்குவதற்காக மாநாட்டில் கலந்துக்கொண்ட நபர்கள் முந்தியடித்துக்கொண்டு சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

இலவச உணவுக்காக முந்தியடித்த பங்கேற்பாளர்கள்

இந்திய திருமணங்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அல்லது பொது நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் இலவச உணவுக்காக பொதுமக்கள் முந்தி அடித்துக்கொண்டு செல்வது தொடர்பான வீடியோ காட்சிகளை பார்த்திருப்போம். ஆனால், பெங்களூரில் உள்ள ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் இலவச உணவு வழங்கப்பட்ட நிலையில், அந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் இலவச உணவுக்காக முந்தி அடித்துக்கொண்டு சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க : செல்ல நாய் சாட்சியாக திருமணம் – இளம் ஜோடியின் வித்தியாச கல்யாணம்!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், நிறுவனத்தில் வழங்கப்படும் இலவச உணவுக்காக அந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் முந்தி அடித்துக்கொண்டு உணவு வாங்குகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us