Viral Video : அமெரிக்காவா, இந்தியாவா?.. டைம்ஸ் ஸ்கொயரில் 1 மணி நேரத்தில் 100 இந்தியர்களை கண்டுபிடித்த இன்ஃப்ளூயன்சர்!
Mumbai Influencer's Challenge Video Goes Viral | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், மும்பையை சேர்ந்த இன்ஃப்ளூயன்சர் ஒருவர், நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயரில் 1 மணி நேரத்தில் 100 இந்தியர்களை கண்டுபிடிப்பது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். இவ்வாறு இணையத்தில் வைரலாகும் சில வீடியோக்கள் உலகில் நடைபெறும் சில சுவாரஸ்ய சம்பங்களை உலகிற்கு காட்டும் விதமாக இருக்கும். அந்த வகையில், மும்பையை சேர்ந்த இன்ஃப்ளூயன்சர் ஒருவர், அமெரிக்காவின் (America), நியூயார்க் (Newyork) மாகாணத்தில் அமைந்துள்ள டைம்ஸ் ஸ்கொயரில் (Times Square) ஒரு மணி நேரத்தில் 100 இந்தியர்களை கண்டுபிடிப்பதாக சேலஞ் செய்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
டைம்ஸ் ஸ்கொயரில் ஒரு மணி நேரத்தில் 100 இந்தியர்கள் – இன்ஃப்ளூயன்சர் சேலஞ்
இந்தியர்கள் இந்தியாவில் மட்டுமன்றி, பல்வேறு உலக நாடுகளில் வசித்து வருகின்றனர். வேலை, படிப்பு உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் வேறு நாடுகளில் வசிக்கின்றனர். குறிப்பாக துபாய், அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட இடங்களில் தான் அதிக இந்தியர்கள் வசிக்கின்றனர். இந்த நிலையில், அமெரிக்காவின், நியூயார்க் மாகாணத்தில் உள்ள டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில், மும்பையை சேர்ந்த இன்ஃப்ளூயன்சர் ஒருவர் ஒரு மணி நேரத்தில் 100 இந்தியர்களை கண்டுபிடிக்கும் சவாலை செய்துள்ளார்.




இதையும் படிங்க : Viral Video : ஒரே ஆணை திருமணம் செய்துக்கொண்ட 3 சகோதரிகள்.. ஒருவரை ஒருவர் பிரிந்து இருக்க முடியாது என இந்த முடிவை எடுத்ததாக விளக்கம்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், மும்பையை சேர்ந்த அந்த இன்ஃப்ளூயன்சர் டைம்ஸ் ஸ்கொயரில் ஒரு மணி நேரத்தில் 100 இந்தியர்களை கண்டுபிடிக்கும் வேலையை தொடங்குகிறார். அவர் சரியாக இரவு 10 மணிக்கு இந்த வேலையை தொடங்குகிறார். அந்த இடம் முழுவதும் சுற்றித் திரிந்து இந்தியர்களை அவர் கணக்கெடுக்கிறார். அவ்வாறு அவர் 100 இந்தியர்களையும் கண்டுபிடித்துவிடுகிறார். அதற்கு அவருக்கு வெறும் 48 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : மனைவி தான் முக்கியம்.. குழந்தையை பார்க்காமல் மனைவியை பார்க்க சென்ற கணவர்.. வைரல் வீடியோ!
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அமெரிக்காவின் ஒரு பகுதியில் மட்டும் இத்தனை இந்தியர்களா என பலரும் வியப்புடன் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.