Viral Video : ஒரே ஆணை திருமணம் செய்துக்கொண்ட 3 சகோதரிகள்.. ஒருவரை ஒருவர் பிரிந்து இருக்க முடியாது என இந்த முடிவை எடுத்ததாக விளக்கம்!
3 Sisters Married One Man In Uttar Pradesh | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், உத்தர பிரதேசத்தில் மூன்று பெண்கள் ஒரே ஆணை திருமணம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் நடைபெறும் சுவாரஸ்யமான மற்றும் வித்தியாசமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும். சில வீடியோக்கள் வரவேற்பையும், சில வீடியோக்கள் விமர்சனங்களையும் பெறும். அந்த வகையில், உத்தர பிரதேசத்தில் மூன்று சகோதரிகள் இணைந்து ஒரே ஆணை திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தான் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகும் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒரே ஆணை திருமணம் செய்துக்கொண்ட மூன்று சகோதரிகள்
ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதுதான், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடைபிடிக்கப்படும் கலாச்சாரமாக உள்ளது. ஒருவர் ஒருவரை மட்டும் தான் திருமணம் செய்ய முடியும் என்றும் சட்டமும் கூறுகிறது. இந்த நிலையில் தான், உத்தர பிரதேசத்தை சேர்ந்த மூன்று சகோதரிகள் ஒரே ஆணை திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த திருமணம் தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : இலவச உணவுக்காக முந்தி அடித்துக்கொண்டு சென்ற பங்கேற்பாளர்கள்.. வைரல் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
🚨 Three Biological Sisters Tie Knot with Same Cameraman at Chamunda Mata Temple😁
In a shocking incident from Hasanpur in Amroha, three biological sisters have married their own cameraman. 💍
Local leaders and community members have strongly condemned the marriage, calling… pic.twitter.com/Gy8ggAA92I
— Perman (@Perman3310) July 23, 2026
உத்தர பிரதேச மாநிலம், அம்ரோகா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தான் இந்த மூன்று சகோதரிகள். இவர்கள் சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்களாக உள்ளனர். இவர்கள் தங்களது கேமராமேனை தான் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். மூன்று பேரும் ஒருவரை ஒருவரை பிரிந்து இருக்க முடியாது என்பதற்காக இந்த முடிவை எடுத்ததாக அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க : Viral Video: ஜிப்லைன் சவாரியில் ஏற்பட்ட கோளாறு.. 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த நபர் – வைரலாகும் காட்சி
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறிய நிலையில் அவர்களின் திருமணம் சட்டப்படி செல்லுமா என்ற கேள்வியும் எழ தொடங்கியது. இந்த நிலையில் தான், அவர்களது திருமணம் சட்டப்படி செல்லாது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த திருமணத்திற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையும், அந்த மூன்று சகோதரிகள் எதிர்ப்புகளை மீறி திருமணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.