AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : காரின் டயர் மீது மோதி வெடிக்க செய்த காட்டெருமை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Bison Pops The Car Tyre | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவில் உள்ள யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் காட்டெருமை ஒன்று காரின் டயரை தாக்கி வெடிக்க செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : காரின் டயர் மீது மோதி வெடிக்க செய்த காட்டெருமை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Jul 2026 20:42 PM IST

சமூக ஊடகங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் உதவியால் இணையத்தில் பல விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அவ்வாறு இணையத்தில் வைரலாகும் சில வீடியோக்களில் சில ஆச்சர்யத்தை அளிக்கும் விதமாகவும், சில அதிர்ச்சி அளிக்கும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில் காட்டெருமை ஒன்று காரின் சக்கரத்தை குத்தி வெடிக்க வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

காரின் டயரை குத்தி கிழித்த காட்டெருமை

அமெரிக்காவில் (America) உள்ள யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் (Yellow Stone National Park) உள்ள விலங்குகள் ஏற்படுத்தும் விபத்துகள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், அந்த யெல்லோஸ்டோன் பூங்காவில் காட்டெருமை ஒன்று காரின் டயரை கிழித்து வெடிக்க வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : மனைவி தான் முக்கியம்.. குழந்தையை பார்க்காமல் மனைவியை பார்க்க சென்ற கணவர்.. வைரல் வீடியோ!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், கார் ஒன்று சாலையில் சென்றுக்கொண்டு இருக்கிறது. அப்போது சாலையின் ஓரத்தில் இருந்து காட்டு எருமை மாடு ஒன்று சாலையின் மீது நடந்துச் செல்கிறது. காரை பார்த்ததும் அந்த எருமை மாடு, அதனை டயர் மீது வேகமாக மோதுகிறது. இதனால் அந்த காரின் டயர் வெடிக்கிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : விவசாயம் செய்யும் மனித ரோபோட்.. இணையத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us