Viral Video : இறந்த டால்பின் குட்டியை சுமந்துக்கொண்டு வலம் வரும் தாய்.. கண் கலங்க வைக்கும் வீடியோ!
Mother Dolphin Carries Dead New Born Dolphin | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், தாய் டால்பின் ஒன்று தனது இறந்த குட்டி டால்பினின் உடலை சுமந்துக்கொண்டு செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். இந்த வீடியோக்களில் சில ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சில வீடியோக்கள் அதிர்ச்சியையும், உணர்வுபூர்வமானதாகவும் இருக்கும். அந்த வகையில், டால்பின் ஒன்று இறந்துப்போன தனது குட்டியை சுமந்துக்கொண்டு கடலில் வளம் வந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோ காண்போரை கண்கலங்க செய்யும் விதமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இறந்த குட்டி டால்பினை முதுகின் மீது வைத்து சுமந்த தாய் டால்பின்
உலகில் தாய் பாசத்திற்கு இணையானது எதுவுமே கிடையாது. ஒரு தாய் தனது பிள்ளையை நேசிப்பது போல வேறு யாராலும் ஒருவரை நேசிக்க முடியாது. மனிதர்கள் மட்டுமன்றி, விலங்குகளுக்கும் இது பொருந்தும். அந்த வகையில், டால்பின் ஒன்று தனது இறந்த குட்டியை சுமந்துக்கொண்டு கடல் முழுவதும் வலம் வந்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : காரின் டயர் மீது மோதி வெடிக்க செய்த காட்டெருமை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
A dolphin named Fraggle was seen carrying her dead calf through Western Australia’s Leschenault Estuary after it died just two weeks after birth. Other dolphins appeared to remain close as she carried the calf, reflecting the strong social bonds observed among the animals.… pic.twitter.com/YvxEpoCu4Q
— TRT World (@trtworld) July 30, 2026
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் தாய் டால்பின் ஒன்று இறந்த தனது குட்டி டால்பினை முதுகில் சுமந்துக்கொண்டு கடலில் நீந்துகிறது. அதனுடன் இன்னும் சில டால்பின்கள் செல்கின்றனர். அதனை பார்ப்பதற்கு மனிதர்கள் இறந்த பிறகு இறுதி சடங்கு நடைபெறுவதை காட்சிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க : Viral Video : காலால் மாவு பிசைந்த பெண்.. இணையத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய வீடியோ.. உண்மை என்ன?
இந்த வீடியோவை பார்க்கும் பலரும் இயற்கை குறித்து தங்களது வியப்பை கருத்துக்களாக பகிர்ந்து வருகின்றனர்.