Viral Video : இந்தியா சுதந்திரம் பெற்ற 79 ஆண்டுகளில் முதல் முறையாக கிராமத்திற்கு வந்த பேருந்து.. கொண்டாடிய கிராம் மக்கள்!
Kurthal Villagers From Rajasthan Welcomed Bus For The First Time | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் 79 ஆண்டுகளுக்கு முதல் முறையாக அரசு பேருந்து வந்த வீடியோ வைரலாகி வருகிற்து.
உலகில் எங்கோ ஒரு மூலையில் நடைபெறும் சம்பவங்கள் கூட சமூக ஊடகங்களின் உதவியால் மிக சுலபமாக உலகிற்கு தெரிய வந்துவிடும். அந்த வகையில் உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்ய அற்றும் ஆச்சர்யமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், ராஜஸ்தானில் (Rajasthan) உள்ள ஒரு கிராமத்தில் 79 ஆண்டுகளில் முதல் முறையாக அரசு பேருந்து இயக்கப்பட்டது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
79 ஆண்டுகளில் முதல் முறையாக வந்த பேருந்து
உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியில் மிக வேகமாக முன்னேறி வருகிறது. ஆள் இல்லாமல் இயங்கும் கார்கள், பறக்கும் கார்கள் வரை கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த காலக்கட்டத்தில் தான் இந்தியாவில் உள்ள சில கிராமங்களில் அத்தியாவசிய போக்குவரத்து கூட பெரிய சவாலாக உள்ளது. அந்த வகையில், ராஜஸ்தான் மாநில, குர்தல் பகுதியில் இந்தியா சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக அரசு பேருந்து இயக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள்.. கிராம் மக்கள் அடி, உதை!
இணையத்தில் வைரலாகு வீடியோ
🇮🇳 Residents of Villages in Rajasthan’s region welcomed a state roadways bus with flowers, aarti, drums and dancing after it reached their villages for the first time.
For villagers who had waited decades for public bus connectivity, the arrival marked a historic moment, with… pic.twitter.com/j1fVMOmL3L
— Traders Paradise (@theparadiselive) August 6, 2026
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஊருக்குள் முதல் முறையாக வரும் பேருந்தை அந்த கிராம் மக்கள் அனைவரும் திரண்டு நின்று மேல, தாளங்கள் முழங்க மாலை அணிவித்து வரவேற்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.