Viral Video : பெற்றோரை நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அழைத்துச் சென்ற பெண்.. கனவு நனவானது!
Daughter Took Parents To Niagara Waterfalls | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பெண் ஒருவர் தனது பெற்றோரை நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அழைத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் இணையத்தில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்கள், மனிதர்களின் வாழ்வியல் ஆகியவை குறித்தான வீடியோக்கள் தான் அதிக அளவில் வைரலாகும். அந்த வகையில், பெண் ஒருவர் தனது பெற்றோரை நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அழைத்துச் சென்றது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. பலரும் அந்த வீடியோ குறித்து மிகவும் மகிழ்ச்சியுடன் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பெற்றோரை நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அழைத்துச் சென்ற பெண்
பிள்ளைகளின் ஆசைகளையும், கனவுகளையும் நிறைவேற்றுவது பெற்றோருக்கு எவ்வளவு மகிழ்ச்சியை தருமோ அதே அளவுக்கு பிள்ளைகளுக்கும் தங்களது பெற்றோர் ஆசைப்பட்டது அல்லது அவர்கள் செய்யாத, கனவு கண்ட விஷயங்களை நினைவாக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். அந்த வகையில், உலகின் மிகவும் பிரபலமான நயாகரா நீர்வீழ்ச்சிக்கு பெண் ஒருவர் தனது பெற்றோரை அழைத்துச் சென்றுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : ஏசி ரயில் பெட்டிக்குள் விளக்கேற்றி பூஜை செய்த பயணி.. பாதுகாப்பு குறித்து சர்ச்சை
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பெண் ஒருவர், தனது பெற்றோர் நயாகரா நீர்வீழ்ச்சியை ரசித்துக்கொண்டு இருக்கும் காட்சிகளை பதிவிட்டுள்ளார். அதில், அவர் எண்ணம் நிறைவேறியது என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : காவலாளிக்கு கல்லூரி மாணவிகள் அளித்த பரிசு.. இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.