AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள்.. கிராம் மக்கள் அடி, உதை!

Two Young Woman Brutally Attacked Men | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளம் பெண்கள் சிலர், இளைஞர்களை மிக கடுமையாக தாக்குவது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video : பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள்.. கிராம் மக்கள் அடி, உதை!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 04 Aug 2026 01:35 AM IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நம்மை சுற்றி நடைபெறும் குற்ற சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் இவ்வாறு இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்களை பெண்கள் மிக கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள்

உத்தராகண்ட் மாநிலம், நயினிதல் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சதாளி பகுதிக்கு கட்டட பணிகளுக்காக 14 பேர் வந்துள்ளனர். அங்கு பணி செய்துக்கொண்டு இருந்த அவர்கள், அந்த பகுதியை சுற்றிப் பார்த்துள்ளனர். அப்போது அருகில் இருந்த ஒரு கடைக்கு சென்ற அவர்கள், அங்கிருந்த இளம் பெண் ஒருவரை கிண்டல் செய்துள்ளனர். அதில் இருந்த ஒரு நபர், அந்த பெண்ணை தகாத இடத்தில் தொட்டுள்ளார். ஆரம்பத்தில் பொறுமையாக இருந்த இளம் பெண், இளைஞர்கள் அத்துமீறிய நிலையில், கிராமத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். அதன்படி, அந்த இடத்திற்கு வந்த கிராமத்தினர், இளைஞர்களை அடித்து துவைத்துள்ளனர்.

இதையும் படிங்க : Viral Video : காலால் மாவு பிசைந்த பெண்.. இணையத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய வீடியோ.. உண்மை என்ன?

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், ஒரு பேருந்து நிலையத்தில் இரண்டு இளைஞர்கள் அமர்ந்துக்கொண்டு இருக்கின்றனர். அவர்கள் முகத்தில் கறுப்பு நிற சாயம் பூசப்பட்டுள்ள நிலையில், அவர்களை இரண்டு பெண்கள் மரக்கிளைகளை வைத்து மிக அடுமையாக தாக்குகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

Follow Us