AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தொகுதி மறுவரையறை மசோதா.. தமிழகத்துக்கு இவ்வளவு தொகுதிகள் கிடைக்குமா.. வெளியானது உத்தேச பட்டியல்!

Tamil Nadu Tentative List Of Lok Sabha Constituencies: நாடாளுமன்றத்தில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு மசோதா நிறைவேறும் பட்சத்தில் தமிழகத்துக்கு 39 தொகுதிகளில் இருந்து 59 தொகுதிகளாக கிடைக்கும் என்றும், அந்த தொகுதிகள் குறித்த உத்தேச பட்டியலும் வெளியாகி உள்ளது.

தொகுதி மறுவரையறை மசோதா.. தமிழகத்துக்கு இவ்வளவு தொகுதிகள் கிடைக்குமா.. வெளியானது உத்தேச பட்டியல்!
தமிழக மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 08 Aug 2026 14:41 PM IST

இந்தியாவில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு மசோதாவை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வரும் நிலையில், தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், தமிழகத்தில் தற்போது 39 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில், இந்த எண்ணிக்கை 59-ஆக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக மக்களவை தொகுதிகளில் உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில்,

மேலும் படிக்க: தொகுதி மறுவரையறை மசோதா.. முதல்வர் விஜய் தலைமையிலான எம்.பிக்கள் கூட்டத்தை புறக்கணிக்க அதிமுக திமுக முடிவு..

  • திருவள்ளூர்.
  • திருத்தணி.
  • சென்னை கிழக்கு.
  • சென்னை வடக்கு.
  • சென்னை தெற்கு.
  • சென்னை மத்தியம்.
  • சென்னை மேற்கு.
  • தாம்பரம்.
  • செங்கல்பட்டு.
  • வேலூர்.
  • காஞ்சிபுரம்.
  • ராணிப்பேட்டை.
  • திருப்பத்தூர்.

திருவண்ணாமலை முதல் மேட்டூர் வரை

  • திருவண்ணாமலை.
  • ஆரணி/ வந்தவாசி.
  • விழுப்புரம்.
  • திண்டிவனம்.
  • கள்ளக்குறிச்சி.
  • கடலூர்.
  • சிதம்பரம்.
  • கிருஷ்ணகிரி.
  • ஓசூர்.
  • சேலம்.
  • தர்மபுரி.
  • மேட்டூர்.

ஈரோடு முதல் அரியலூர் வரை

  • ராசிபுரம்.
  • ஈரோடு.
  • நாமக்கல்.
  • திருப்பூர்.
  • கோபிசெட்டிபாளையம்.
  • தாராபுரம்/ பழனி.
  • பொள்ளாச்சி.
  • கோயம்புத்தூர் மேற்கு.
  • கோயம்புத்தூர் கிழக்கு.
  • கரூர்.
  • நீலகிரி.
  • அரியலூர்/ லால்குடி.

பெரம்பலூர் முதல் தூத்துக்குடி வரை

  • பெரம்பலூர்.
  • திருச்சி.
  • கும்பகோணம்.
  • தஞ்சாவூர்.
  • நாகப்பட்டினம்.
  • மயிலாடுதுறை.
  • திருவாரூர்.
  • சிவகங்கை.
  • புதுக்கோட்டை.
  • ராமநாதபுரம்.
  • திருச்செந்தூர்.
  • தூத்துக்குடி.

திருநெல்வேலி முதல் திண்டுக்கல் வரை

  • திருநெல்வேலி.
  • கன்னியாகுமரி/ நாங்குநேரி.
  • நாகர்கோவில்/ கன்னியாகுமரி.
  • சிவகாசி.
  • தென்காசி.
  • தேனி.
  • விருதுநகர்.
  • மதுரை மேற்கு.
  • மதுரை கிழக்கு.
  • திண்டுக்கல் ஆகிய 59 மக்களவைத் தொகுதிகள் கிடைக்கும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 850- ஆக உயரும்

மறுவரையறை ஆணையத்தின் இறுதி முடிவுகள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டு அதற்கான ஒப்புதல் கிடைத்த பின்னரே இந்த பட்டியல் இறுதி வடிவம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய, நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 543- ஆக இருக்கும் நிலையில், தொகுதி மறுவரையறைக்கு பிறகு மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 850 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தொகுதி மறுவரையறைக்கு ஏன் எதிர்ப்பு

இதில், மக்கள் தொகையை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு இதைவிட அதிக தொகுதிகள் கிடைக்கும் என்ற காரணத்தால் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதாவது, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடந்த சில ஆண்டுகளாக குடும்ப கட்டுப்பாட்டு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி மக்கள் தொகையை கட்டுப்படுத்தி உள்ளன. இந்த மசோதா நிறைவேறினால் தமிழகத்தில் என்னென்ன பெயர்களில் மக்களவைத் தொகுதிகள் இருக்கும் என்ற உத்தேச பட்டியல் தான் தற்போது வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: கரூர் பணி நியமனம் ரத்து விவகாரம்.. மேல்முறையீட்டு மனுக்கள் ஏற்பு.. உச்ச நீதிமன்றத்தில் ஆக.14-ல் விசாரணை!!

Follow Us