AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கேப்டன் மில்லர் படத்திற்காக தேசிய விருதைப் பெற்ற நடிகர் தனுஷ் – வைரலாகும் வீடியோ

Actor Dhanush Received National Award | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் இன்று நடைப்பெறும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவரிடம் இருந்து கேப்டன் மில்லர் படத்திற்காக விருதினை வென்றுள்ளார்.

கேப்டன் மில்லர் படத்திற்காக தேசிய விருதைப் பெற்ற நடிகர் தனுஷ் – வைரலாகும் வீடியோ
குடியரசுத் தலைவரிடம் தேசிய விருதை வென்ற தனுஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Sep 2026 18:07 PM IST

இந்தியா முழுவதும் மாநில அரசு மற்றும் மத்திய அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சினிமாவில் சிறப்பாக விளங்குபவர்களுக்கு தொடர்ந்து விருதுகள் வழங்கி கௌரவிப்பது வழக்கமாக உள்ளது. தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை இந்திய அளவில் பல மொழிகளில் வெளியாகும் படங்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகின்றது மத்திய அரசு. அதன்படி மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் விருதிற்கு தேசிய திரைப்பட விருது என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று 72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் நடைப்பெற்றது. இந்த விழாவில் இந்தியா முழுவதும் உள்ள திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இது 2024-ம் ஆண்டிற்கான திரைப்பட விருது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த விருது விழாவில் விருது பெருபவர்கள் யார் யார் என்பது குறித்த அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் 18-ம் தேதி 2026-ம் ஆண்டே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் மில்லர் படத்திற்காக தேசிய விருதைப் பெற்ற நடிகர் தனுஷ்:

இந்த நிலையில் நடிகர் தனுஷ் இன்று நடைப்பெற்ற 72-வது தேசிய திரைப்பட விழாவில் கலந்துகொண்டார். இவருக்கு கேப்டன் மில்லர் படத்திற்காக விருது அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த விருதினை இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கையால் பெற்றுக் கொண்டார் நடிகர் தனுஷ். அது மட்டும் இன்றி தனுஷின் 50-வது படமான ராயன் அவரே இயக்கி நடித்து இருந்த நிலையில் அந்தப் படத்திற்கும் இன்று விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனுஷ் விருது வாங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றது.

Also Read… ராஜூ ஜெயமோகன் இயக்கத்தில் உருவாகும் ஆல்மோஸ்ட் நல்லவன் – இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… விஜய் சேதுபதியின் பத்தா படத்தின் கதை இதுதானா? வைரலாகும் தகவல்

Follow Us