AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 15 புதிய நீதிபதிகள் நியமனம்… யார்.. யார்… முழு விவரம் உள்ளே!

Madras High Court New Judges Appointed : சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 5 நீதிபதிகள் மற்றும் 10 கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அவர்கள் யார் யார் என்ற விவரத்தை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 15 புதிய நீதிபதிகள் நியமனம்… யார்.. யார்… முழு விவரம் உள்ளே!
சென்னை உயர்நீதிமன்றம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 07 Aug 2026 21:40 PM IST

இந்தியாவில் தமிழகம், கர்நாடகம், மத்திய பிரதேசம், கொல்கத்தா ஆகிய மாநில உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமித்து குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேவால் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய அரசியல் அளித்த அதிகாரத்தின் அடிப்படையிலும் இந்திய தலைமை நீதிபதியுடன் ஆலோசனை மேற்கொண்டதன் அடிப்படையிலும் பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் மற்றும் கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில், தமிழக உயர்நீதிமன்றத்திற்கு 5 வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில்,

மேலும் படிக்க: விருத்தாசலம் தனி மாவட்டம் ஆகிறதா? சட்டப்பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!

  • ரஜ்னிஷ் பதியில்.
  • ஜி. கே. முத்துக்குமார்.
  • கோவிந்தராஜன்.
  • கிருஷ்ணசாமி.
  • ரமேஷ் நடராஜன்.
  • ராமகிருஷ்ணா ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோர் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதே போல, மேலும் 3 வழக்கறிஞர்கள் மற்றும் 7 நீதித்துறை அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில்,

  • திலீப் குமார் நடராஜன் ( வழக்கறிஞர்).
  • ரவிக்குமார் சங்கரநாராயணன் ( வழக்கறிஞர்).
  • முருகன் ( நீதித்துறை அதிகாரி).
  • எல்லப்பன் மனோகரன் ( வழக்கறிஞர்).
  • அல்லி ( நீதித்துறை அதிகாரி).
  • சுமதி ( நீதித்துறை அதிகாரி).
  • திருமகள் ( நீதித்துறை அதிகாரி).
  • குணசேகரன் ( நீதித்துறை அதிகாரி).
  • சண்முகன் கார்த்திகேயன் ( நீதித்துறை அதிகாரி).
  • முருகேசன் பாலுசாமி ( நீதித்துறை அதிகாரி) ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகள்:

  • சுப்பிரமணிய ரங்கா ராவ்.
  • ராகவேந்திரா எஸ். ஸ்ரீ வஸ்தா.
  • பிரமோத் பகேஸ்வரா.
  • ஹேமா குல்கர்னி.
  • விவேகானந்தா ததகாவடி பிரகாஷ்.
  • சாந்தி பூஷன் ஹோம்பே கவுடா.

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதிகள்:

  • ஆதரப் பானர்ஜி.
  • ஆர்யக் தக்.
  • பார்த்தா பிரதிம் ராய்.
  • சந்தீப் குமார்.
  • அனுஜ் சிங்.
  • ரிஷத் மேதோரா.
  • சுதீப் தேப். அர்ஜுன் ரே முகர்ஜி.

மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிகள்:

  • அமித் லகோரி கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேலால் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவதற்காக உச்சநீதிமன்ற கொலீஜியம் 19 பேரின் பெயர்களை பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு அனுப்பி இருந்தது. இதனை பரிசீலித்த ஜனாதிபதி முர்மு, 15 பேரை தேர்வு செய்து உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அவையில் அப்பாவை காணோம் என மீண்டும் கூறிய அமைச்சர்.. கொதித்தெழுந்த திமுகவினர்!

Follow Us