தேனியில் பயங்கரம்.. காதல் வலையில் வீழ்த்தி சிறுமியை சீரழித்த சிறுவன்.. உடந்தையாக இருந்த பெற்றோர் கைது!
Theni Crime : தேனி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி திண்டுகல்லுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர். இதில், உடந்தையாக இருந்த சிறுவனின் பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இதே பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி திடீரென மாயமானார். இது தொடர்பாக, சிறுமியின் பெற்றோர் தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், 16 வயது சிறுமியும், 16 வயது சிறுவனும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில், சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறிய சிறுவன், அந்த சிறுமியை அழைத்துச் சென்றதாக தெரிகிறது. இது தொடர்பாக, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், அந்த சிறுவன் மற்றும் சிறுமி திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்தது தெரிய வந்தது.
சிறுமியை வன்கொடுமை செய்த சிறுவன்
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்திற்கு விரைந்து சென்ற தேனி போலீசார் அங்கு இருந்த சிறுவன் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். அந்த சிறுவனை போலீசார் விரட்டி பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதன் காரணமாக சிறுமியை மற்றும் மீட்டு தேனிக்கு அழைத்து வந்தனர். அங்கு, காவல் நிலையத்தில் வைத்து சிறுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த சிறுவன் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்ததாகவும், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: கல்லூரி மாணவியிடம் காக்கி உடையில் அத்துமீறிய காவலர்.. கோவை காவல் ஆணையர் எடுத்த அதிரடி நடவடிக்கை!




சிறுவன் – பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு
இதை தொடர்ந்து, அந்த சிறுமியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு கூறி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த சிறுவனின் பெற்றோர் இதற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதன் காரணமாக, சிறுவன் மற்றும் அவரது பெற்றோர் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தப்பி ஓடிய சிறுவனுக்கு போலீஸ் வலைவீச்சு
அதன் அடிப்படையில், சிறுவனின் பெற்றோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக இருந்து வரும் 16 வயது சிறுவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தேனியில் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அனைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுவன் மற்றும் சிறுமி 18 வயதுக்குள்பட்டவர்கள் என்பதால் அவர்கள் குறித்து விவரம் வெளியிடப்படவில்லை.
மேலும் படிக்க: காவலாளியை மிரட்டி லஞ்சம் பெற்ற அதிகாரி… பாய்ந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்.. ஈரோட்டில் வட்டார வளர்ச்சி அலுவலர் கைது!