ரஜினிகாந்தின் தர்மன் படத்தின் தற்போதைய நிலை என்ன? இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ஓபன் டாக்
Director Ashwath Marimuthu about Dharman movie | நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் தர்மன். இந்தப் படத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து சமீபத்தில் பட விழாவில் பேசியது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி உலக அளவில் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சமீபத்தில் இவரது 173-வது படத்தை இயக்குவது யார் என்று முடிவாவதில் தொடர்ந்து பல சிக்கல்கள் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் 172-வதாக ஜெயிலர் 2 படம் முடிவடைந்த பிறகு 173-வது படத்தை கமல் ஹாசன் தயாரிக்க அந்தப் படத்தை இயக்குநர் சுந்தர் சி எழுதி இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர் சி அந்தப் படத்தில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டார். பிறகு சிவகார்த்திகேயனின் டான் படத்தினை இயக்கிய இயக்குநர் சிபி சக்ரவர்த்தி தலைவர் 173 படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. அதுவும் சட்டசிக்கலால் தொடராமல் போனது.
இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து அந்தப் படத்தை இயக்குவதை உறுதி செய்த நிலையில் படத்திற்கு தர்மன் என்று பெயர் வைக்கப்பட்டு படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் பட விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தர்மன் படம் குறித்து பேசியது வைரலாகி வருகின்றது.




ரஜினிகாந்தின் தர்மன் படத்தின் தற்போதைய நிலை என்ன?
அதன்படி அந்த பட விழாவில் அஸ்வத் மாரிமுத்து பேசியதாவது, படப்பிடிப்பின் மூன்றாம் கட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் கொண்ட படப்பிடிப்புக்காக நாங்கள் மைசூருக்குச் செல்லவிருக்கிறோம். பணியின் வேகத்தையும் தரத்தையும் கண்டு ரஜினி சார் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். நாங்கள் அனைவரும் ‘தலைவரின் தீவிர ரசிகர்கள். அவரைப் பார்த்தே நாங்கள் வளர்ந்தோம். ஆரம்பத்தில் எனக்குச் சற்று பயம் இருந்தபோதிலும், இப்போது அவருடன் மிக இயல்பாகப் பழகும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு முன் நான் அசோக் மற்றும் பிரதீப் ஆகியோருடன் மட்டுமே பணியாற்றியிருந்தேன். ஆனால், அவரது பணிக்கு அர்ப்பணிக்கும் விதம் மிகவும் நேர்மையானதாகவும் அற்புதமாகவும் இருக்கிறது. மிகுந்த உற்சாகம் கொண்ட ஒரு குழந்தையைப் பார்ப்பது போன்ற உணர்வை அவர் தருகிறார். இப்போதும் அதே ஆற்றலுடனும், அதே வசீகரத்துடனும் அவர் திகழ்கிறார்.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவும்:
#Dharman Update from #AshwathMarimuthu:
“Third schedule is going on..🤝 We are heading to Mysore for a 10-day schedule. Rajini sir is very happy with the pace and quality of the work. We are all very big fans of Thalaivar. We grew up watching him. I’ve developed a very good…
— Laxmi Kanth (@iammoviebuff007) September 21, 2026