Viral Video : 52 ஆண்டுகளுக்கு பிறந்த பெண் குழந்தை.. கொண்டாடிய குடுபத்தினர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
A Family Celebrates Baby Girl Born After 52 Years | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், 52 ஆண்டுகளுக்கு பிறந்த குழந்தையை குடும்பத்தினர் கொண்டாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் இந்த உலகில் நம்மை சுற்றி நடைபெறும் பல சுவாரஸ்யமான மற்றும் வித்தியாசமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், குடும்பத்தில் 52 ஆண்டுகளுக்கு பிறந்த பெண் குழந்தையை, அந்த குடும்பம் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
52 ஆண்டுகளுக்கு பிறந்த பெண் குழந்தை – கொண்டாடிய குடும்பம்
இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்களில் ஆண் குழந்தைகளுக்கு இருக்கும் வரவேற்பும், உற்சாகமும் பெண் குழந்தைகளுக்கு இருப்பதில்லை. பெரும்பாலான குடும்பங்கள் பெண் குழந்தைகளை பாரமாக பார்ர்கின்றன. இதன் காரணமாக அவர்கள் ஆண் குழந்தைகள் பிற வேண்டும் என ஆசைப்படுகின்றனர். ஆனால், சில குடும்பங்களோ ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் குழந்தைகளை பெற்று, சிறப்பான முறையில் வளர்க்கின்றனர். இந்த நிலையில், பெண் குழந்தை பிறந்ததற்கு குடும்பமே மகிழ்ச்சியில் கொண்டாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : காவலாளிக்கு கல்லூரி மாணவிகள் அளித்த பரிசு.. இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பிரச அறைக்கு வெளியே ஏராளமான குடும்பத்தினர் நின்றுக்கொண்டு இருக்கின்றனர். அவர்கள், குழந்தை எப்போது பிறக்கும் என ஆர்வத்துடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர். குழந்தை பிறந்தவுடன் மருத்துவர் ஒருவர் குழந்தை எடுத்து வந்து பெண் குழந்தை என்றதும், அவர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகின்றனர். 52 ஆண்டுகளுக்கு பிறகு அந்த குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்ததன் காரணமாக அவர்கள் அத்தனை மகிழ்ச்சியாக உள்ளனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : ஒரே ஆணை திருமணம் செய்துக்கொண்ட 3 சகோதரிகள்.. ஒருவரை ஒருவர் பிரிந்து இருக்க முடியாது என இந்த முடிவை எடுத்ததாக விளக்கம்!
இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவுக்கு பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.