AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இணையத்தில் வைரலாகும் நடிகர் தனுஷின் ரீசென்ட் போட்டோ

Actor Dhanush recent photo | பான் இந்திய மொழிகளில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்களின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இணையத்தில் வைரலாகும் நடிகர் தனுஷின் ரீசென்ட் போட்டோ
தனுஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Aug 2026 14:39 PM IST

தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி தற்போது உலக அளவில் பிரபல நடிகராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ் (Actor Dhanush). இவர் சினிமாவில் நடிப்பு மற்றும் இன்றி தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் இயக்குநராகவும் வலம் வருகிறார். இதுவரை சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் 54 படங்கள் வெளியாகி உள்ளது. பல மொழிகளில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் மட்டும் அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இறுதியாக கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் கர படம் திரையரங்குகளில் வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள படம் ஓம் (OM Movie). இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Director Rajkumar Periyasamy) எழுதி இயக்கி வரும் இந்தப் படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இந்த ஓம் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் திருவண்ணாமலை பகுதிகளில் நடைப்பெற்று வருகின்றது. இந்த படப்பிடிப்பில் நடிகர்கள் தனுஷ், சாய் பல்லவி, மம்முட்டி மற்றும் ஸ்ரீலீலாவின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

இணையத்தில் வைரலாகும் நடிகர் தனுஷின் ரீசென்ட் போட்டோ:

தொடர்ந்து நடிகர் தனுஷின் படங்கள் தொடர்பான தகவல்களும் அப்டேட்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் படம் வருகின்ற அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் நடிகர் தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… நயன்தாரா – கவினின் ஹாய் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு? – காரணம் இதுவா?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவின் தமிழ்படம் 3 ஷூட்டிங் எப்போது? வைரலாகும் தகவல்

Follow Us