Viral Video : ஆபத்தான முறையில் டேமை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்.. ஒவ்வொரு தூண்களாக தாவிச் செல்லும் வீடியோ வைரல்!
School Students Dangerously Crossing Dam To Reach School | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும். அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் டேமை கடந்து பள்ளிக்கு செல்லும் வீடியோ வைரல்.
சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சில சுவாரஸ்ய மற்றும் குற்ற சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் தான் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் டேமை கடந்து பள்ளிக்கு செல்வது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டேமை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்
இந்தியாவில் இன்றளவும் கூட பல்வேறு கிராமங்களில் போதிய சாலை வசதி இல்லாமல் உள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், முதியவர்கள் என அனைவரும் ஆற்றை கடந்துச் செல்வது, பல கிலோமீட்டர் தூரம் நடந்துச் செல்வது உள்ளிட்ட சூழலில் வசிக்கின்றனர். அந்த வகையில், மத்திய பிரதேசத்தின், விதிஷா மாவட்டத்தில் உள்ள கருவா என்ற கிராமத்தில் மாணவர்கள் சிலர் டேமை கடந்து பள்ளிக்கு செல்கின்றனர். அது தொடர்பான வீடியோ தான் தற்போது சமூல வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : 52 ஆண்டுகளுக்கு பிறந்த பெண் குழந்தை.. கொண்டாடிய குடுபத்தினர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Madhya Pradesh :Five Class 9 girls risk their lives daily crossing a 1.5 km Betwa River dam to reach school. Following public outcry, authorities promised bicycles, a temporary bridge, and a local school. pic.twitter.com/3EkppV7Jk5
— jarvis ☠️ (@Vishii14) August 4, 2026
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பள்ளி மாணவ, மாணவிகள் சிலர் தண்ணீர் ஓடும் டேமை கடந்து பள்ளிக்குச் செல்கின்றனர். பல தூண்களாக அந்த டேம் கட்டப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு தூண்களாக குதித்து குதித்து அந்த மாணவர்கள் பள்ளிக்குச் செல்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பள்ளி மாணவர்களின் நலனுக்காக அரசு சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.