ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு முயற்சி! இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..
பொதுப் பெட்டியின் கதவு அருகே அசோக் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. ரயில் பனோலி ரயில் நிலையத்தை கடந்து சென்றபோது, அங்குள்ள நடைமேடையில் பெஞ்சில் படுத்திருந்த ஒருவர் திடீரென எழுந்து, ஓடும் ரயிலை நோக்கி ஓடியுள்ளார். பின்னர், கதவு அருகே அமர்ந்திருந்த அசோக்கிடம் இருந்து செல்போனைப் பறித்துக்கொண்டு தப்பியதாகக் கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 10, 2026: குஜராத் மாநிலம் அங்க்லேஷ்வர் அருகே உள்ள பனோலி ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் பயணியிடம் செல்போனைப் பறிக்க முயன்ற சம்பவத்தில், இளைஞர் ஒருவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற்றுள்ளது. உயிரிழந்தவர் ராஜஸ்தானைச் சேர்ந்த 32 வயதான அசோக் குர்ஜர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குடும்பத்தைப் பராமரிப்பதற்காக ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவர், சவாய் மாதோபூரில் இருந்து சூரத் நோக்கி ஜெய்ப்பூர்–பாந்த்ரா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் (12980) பயணம் செய்துள்ளார்.
ரயில் பயணியிடம் செல்போன் பறிக்க முயற்சி:
அப்போது, பொதுப் பெட்டியின் கதவு அருகே அசோக் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. ரயில் பனோலி ரயில் நிலையத்தை கடந்து சென்றபோது, அங்குள்ள நடைமேடையில் பெஞ்சில் படுத்திருந்த ஒருவர் திடீரென எழுந்து, ஓடும் ரயிலை நோக்கி ஓடியுள்ளார். பின்னர், கதவு அருகே அமர்ந்திருந்த அசோக்கிடம் இருந்து செல்போனைப் பறித்துக்கொண்டு தப்பியதாகக் கூறப்படுகிறது.
பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்:
Passenger Dies After Mobile Snatching at Panoli Station: CCTV Shows Everything Yet RPF Failed to Act
Poor Autorickshaw driver Ashok Gurjar 32 died after a platform snatcher grabbed his phone at Panoli station.
He fell from the moving train and was dragged 100 metres.
CCTV… pic.twitter.com/UprAsz1ipx
— Ramesh Tiwari (@rameshofficial0) August 9, 2026
எதிர்பாராத விதமாக செல்போன் பறிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த அசோக், நிலைதடுமாறியுள்ளார். ரயிலில் இருந்து கீழே விழாமல் இருக்க சில நேரம் பெட்டியைப் பிடித்தபடி தொங்கியதாகவும், பின்னர் பிடி நழுவி நடைமேடையில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: 2030க்குள் 4 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மின்சார வாகனத் துறை! இந்தியாவில் புதிய வேலை சந்தை
இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சிசிடிவி காட்சிகளில், ரயில் பனோலி நிலையத்தை கடந்து செல்லும்போது ஒருவர் ஓடும் ரயிலை நோக்கி ஓடி வந்து, பயணியிடம் இருந்து செல்போனைப் பறித்துச் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நபர்:
ரயிலில் இருந்து கீழே விழுந்ததில் அசோக்கிற்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், செல்போனைப் பறித்ததாகக் கூறப்படும் நபரை அடையாளம் காணும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இளைஞர் ரயிலில் இருந்து தவறி விழுந்ததற்கான சரியான காரணம் மற்றும் சம்பவத்தின் முழுமையான பின்னணி குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.