AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : பஞ்சாப்பில் சாம்பி டிரக்ஸ் பயன்படுத்திய இளைஞர்கள்?.. அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ!

Young Men Used Zombie Drugs In Punjab? | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பஞ்சாப் இளைஞர்கள் சிலர் சாம்பி போதைப் பொருள் பயன்படுத்தியதாக வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video : பஞ்சாப்பில் சாம்பி டிரக்ஸ் பயன்படுத்திய இளைஞர்கள்?.. அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 11 Aug 2026 21:30 PM IST

உலகில் நம்மை சுற்றி நடைபெறும் முக்கிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும். அவற்றில் சில வீடியோக்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சில வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில், பஞ்சாப்பில் (Punjab) இரண்டு இளைஞர்கள் சாம்பி போதைப் பொருள் (Zombie Drugs) பயன்படுத்தியதாக வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

பஞ்சாப்பில் சாம்பி போதைப் பொருள் பயன்படுத்தி இளைஞர்கள்?

உலக அளவில் போதைப்பொருள் ஒரு மிகப்பெரிய சிக்கலாக உள்ளது. போதைப் பழகத்திற்கு அடிமையானவர்கள் தங்களது வாழ்க்கையை இழக்கும் ஆபத்துகள் உள்ளன. இதன் காரணமாக போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் போதைப் பொருள் பழக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்த வகையில், பஞ்சாப்பில் இரண்டு இளைஞர்கள் சாம்பி போதைப் பொருள் பயன்படுத்தியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : ஆபத்தான முறையில் டேமை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்.. ஒவ்வொரு தூண்களாக தாவிச் செல்லும் வீடியோ வைரல்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், இரண்டு இளைஞர்கள் சாலையின் நடுவே சாம்பியை போல நின்றுக்கொண்டு இருக்கின்றனர். அவர்களை கடந்து வாகனங்கள், மனிதர்கள் செல்கின்றனர். ஆனால், அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் சாம்பியை போல நின்றுக்கொண்டு இருக்கின்றனர்.

இதையும் படிங்க : Viral Video : சாலையோர வசிப்பவரை எட்டி உதைத்த கண்டக்டர்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

இந்த வீடியோ பஞ்சாப்பில் பதிவு செய்யப்பட்டதாக பதிவிடப்பட்ட நிலையில், அது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பஞ்சாப் போலீசார், இது பஞ்சாப்பில் நடந்த சம்பவம் இல்லை என்றும், ராஜஸ்தானில் நடைபெற்றுள்ளது என்றும் விளக்கமளித்துள்ளனர்.

Follow Us