AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Viral Video : கோழியை பிடிக்க மின் கம்பத்தின் மீது ஏறிய ராட்சத பாம்பு.. இணையத்தில் வைரலாகி வரும்!

Snake Climbs Pole for Chicken In Viral Video | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும். அந்த வகையில், மின் கம்பத்தின் மீது இருக்கும் கோழியை பாம்பு பிடிக்கச் செல்வது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : கோழியை பிடிக்க மின் கம்பத்தின் மீது ஏறிய ராட்சத பாம்பு.. இணையத்தில் வைரலாகி வரும்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 19 Oct 2026 23:52 PM IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் நாள்தோறும் வெளியாகி வைரலாகும். இந்த வீடியோக்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான சாரம்சத்தை கொண்டு இருக்கும். உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்ய மற்றும் முக்கிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இவ்வாறு இணையத்தில் வைரலாகும். அந்த வகையில், மின் கம்பம் ஒன்றில் ஆறு அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று ஏறி கோழியை பிடிக்க முயற்சி செய்வது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மின் கம்பத்தின் மீது ஏறிய ஆறு நீள பாம்பு

செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் அதன் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. குறிப்பாக சமூக ஊடகங்களில் நாள்தோறும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் உருவாக்கப்படும் வீடியோக்கள் அதிகம் பகிரப்படுகின்றன. இதன் காரணமாக அது உண்மை, எது செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் தயாரிக்கப்பட்ட வீடியோ என தெரியாமல் பயனர்கள் குழம்பி வருகின்றனர். இந்த நிலையில், அத்தகைய வீடியோ ஒன்று தான் தற்போது இணையத்தை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : ஹண்டிங்டன் பீச்சில் எழுந்த ராட்சத சுனாமி அலைகள்.. வைரலாகும் ஷாக் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Wild Snap Nature (@wild.snapnature)

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் மின் கம்பம் ஒன்றின் மீது ஆறு அடி நீளம் கொண்ட ராட்சத தோற்றம் கொண்ட பாம்பு ஒன்று, மின் கம்பத்தின் மீது நின்றுக்கொண்டு இருக்கும் கோழியை பிடிக்க ஏறுகிறது. ஆனால், அந்த பாம்பு கம்பத்தின் உச்சிக்கு சென்றதும் கோழி பறந்துவிடும் நிலையில், பாம்பு மின்சாரம் தாக்கி துடிதுடிக்கிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : முதுகில் குழந்தையுடன் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் உருவாக்கப்பட்ட நிலையில், அது தற்போது வைரலாகி வருகிறது.

Follow Us