AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Viral Video : ஹண்டிங்டன் பீச்சில் எழுந்த ராட்சத சுனாமி அலைகள்.. வைரலாகும் ஷாக் வீடியோ!

Giant Tsunami-Like Waves Flood Huntington Beach | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், கலிஃபோர்னியாவில் உள்ள ஹண்டிங்டன் கடற்கரையில் ராட்சத சுனாமி அலைகள் உருவானது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video : ஹண்டிங்டன் பீச்சில் எழுந்த ராட்சத சுனாமி அலைகள்.. வைரலாகும் ஷாக் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Oct 2026 21:58 PM IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வீடியோக்களில் சில ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சில அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில், கலிஃபோர்னியாவில் (California) உள்ள ஹண்டிங்டன் பீச்சில் (Huntington Beach) சுனாமி அலைகள் அடித்தது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஹண்டிங்டன் பீச்சில் சுனாமி அலைகள் : தண்ணீரில் மூழ்கிய சாலைகள்

நேற்று (அக்டோபர் 09, 2026) காலை, பனாமாவில் பயங்கர நிலநடுக்கத்துகான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக பனாமாவை சுற்றியுள்ள பகுதிகளான கொலம்பியா, ஈகுவேடர், நைஜீரியா, கவுதமாலா ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதேபோல ஈஸ்டர் தீவு, சிலி ஆகிய பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் தான் ஹண்டிங்டன் பீச்சில் சுனாமி அலைகள் போல ராட்சத அலைகள் எழுந்து சாலை முழுவதும் தண்ணீரில் மூழ்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதையும் படிங்க : ஆட்டோ கட்டணத்தால் வெடித்த சந்தை.. ஓட்டுநர், இளம் பெண்கள் இடையே மோதல்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், சுனாமி அலைகளை போன்ற ராட்சத அலைகள் ஹண்டிங்டன் கடற்கரையை வந்து மோதுகின்றன. அதன் மூலம் அந்த கடற்கரையை ஒட்டியுள்ள சாலை முழுவதுமாக தண்ணீரால் மூடப்படுகிறது. கண்ணுக்கு தெரியும் தூரம் வரை அவ்வாறு பெரிய ராட்சத அலை காரணமாக தண்ணீர் வந்து சாலையை மூடுகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : சாலையோர உணவகத்தில் நடந்த கலவரம்.. இரண்டு குழுக்கள் இடையே பயங்கர மோதல்.. வைரல் வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us