Viral Video : தண்ணீரில் தத்தளித்த யானைக் குட்டி.. படகில் சென்று மீட்ட மீனவர்கள்!
Fishermen Rescue Elephant Calf in Kolkata Flood | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், கொல்கத்தா வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக் குட்டியை மீனவர்கள் மீட்டது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களில் உதவியால், உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்யமான மற்றும் அசாத்தியமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும். இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றதா என சொன்னாலும் நம்ப முடியாத சம்பவங்களின் வீடியோக்கள் கூட அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். அந்தகைய ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ ஒன்றுதான் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி
கொல்கத்தாவில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அப்போது யானைக் குட்டி ஒன்று அங்குள்ள டீஸ்டா ஆற்றுக்கு அடித்துச் செல்லப்பட்டு வந்துள்ளது. தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு யானைக் குட்டி, தத்தளித்துக்கொண்டு இருந்த நிலையில், அந்த வழியாக படகில் சென்ற மீனவர்கள் யானை குட்டியை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டுவந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தான் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : காரின் பேனட் மீது வைத்து இளம் பெண்ணை இழுத்துச் சென்ற நபர்.. ஷாக் வீடியோ!
இணையத்தில் வௌரலாகி வரும் வீடியோ
Humanity. ❤️
Fishermen rescue elephant calf from Teesta River in Gajoldoba, reunite it with mother. pic.twitter.com/uQL4EEW32L
— Mayukh Biswas (@MayukhDuke) September 21, 2026
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் மீனவர்கள் சிலர் படகில் சென்றுக்கொண்டு இருக்கின்றனர். அவர்கள் தூரத்தில் யானைக் குட்டி ஒன்று தத்தளித்துக்கொண்டு இருப்பதை பார்க்கின்றனர். இந்த நிலையில், யானைக் குட்டியை நெருங்கிச் செல்லும் அவர்கள், ஒன்றாக இணைந்து யானைக் குட்டியை மீட்டு தங்களது படகில் ஏற்றிக்கொண்டு கரைக்கு திரும்புகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : சாலையோர உணவு கலாச்சாரத்தை தலைகீழாக மாற்றிய அதிகாரி.. குவியும் பாராட்டு!
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.