Watch Video: முதலமைச்சர் விஜய் ஸ்டைலில் விநாயகர் சிலை.. இணையத்தில் கலக்கும் வைரல் வீடியோ..
தமிழக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் செய்த சைகையை முன்னுதாரணமாகக் கொண்டு, அதே பாணியில் விநாயகர் சிலை ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் சைகையை மிகவும் தத்ரூபமாக பிரதிபலிக்கும் வகையில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இந்த காட்சி உண்மையான வீடியோவா அல்லது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டதா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
செப்டம்பர் 4, 2026: விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பிள்ளையார் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் செய்த சைகையைப் போன்ற வடிவில் விநாயகர் சிலை ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
விநாயகர் சதுர்திக்கு தயாராகும் தமிழகம்:
பொதுவாக விநாயகர் சதுர்த்தியன்று வீடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலையை வைத்து, விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, பழங்கள், பொரி உள்ளிட்டவற்றை நைவேத்தியமாக படைத்து மக்கள் வழிபடுவது வழக்கம். சிலர் அன்றைய தினமே மாலை அல்லது இரவு நேரத்தில் சிலையை அருகிலுள்ள நீர்நிலைகளில் கரைப்பார்கள். மேலும் சிலர் மூன்று, ஐந்து அல்லது ஏழு நாட்கள் வீட்டில் வைத்து தினமும் வழிபட்டு, பின்னர் நீர்நிலைகளில் கரைப்பதும் வழக்கமாக உள்ளது.
விநாயகர் சதுர்த்திக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தொடங்குவது வழக்கம். புல்லட் விநாயகர், பாக்சிங் விநாயகர், சந்திரன் விநாயகர் என ஆண்டுதோறும் அப்போதைய டிரெண்டுக்கு ஏற்ப வித்தியாசமான வடிவங்களில் சிலைகள் வடிவமைக்கப்படுகின்றன.
முதலமைச்சர் விஜய் ஸ்டைலில் விநாயகர் சிலை:
#Vijay Vinayagar Chathurthi! 🐘🙏🔥✨ pic.twitter.com/p05OMWpBrf
— KARTHIK SK (@KARTHIKSK07) September 3, 2026
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 14ஆம் தேதி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்வேறு வடிவமைப்புகளில் விநாயகர் சிலைகள் தமிழகத்திற்கு வரத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில், தமிழக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் செய்த சைகையை முன்னுதாரணமாகக் கொண்டு, அதே பாணியில் விநாயகர் சிலை ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் சைகையை மிகவும் தத்ரூபமாக பிரதிபலிக்கும் வகையில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: ரூ.35-க்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம்! 8,739 ரேஷன் கடைகளில் விற்பனை..
ஏ.ஐ விடியோவா?
இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. பலரும் இதுகுறித்து தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
எனினும், இந்த காட்சி உண்மையான வீடியோவா அல்லது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டதா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இதனால், சமூக வலைதளங்களில் பரவும் இந்தக் காட்சியின் உண்மைத் தன்மை குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.